Tamilnadu

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

 தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை

தலைநகர் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.

சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ இரண்டு மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு போராட்​டம் மேற்கொண்டனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்​று பேச்​சு​வார்த்​தை​ தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறை புதன்கிழமை மாலை அறிவுறுத்தியது.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை அங்கு தொடர்ந்தனர். சுதந்திர தினம் நெருங்குகின்ற சூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கையில் தேசிய கொடியை ஏந்தி இருந்தனர். இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
கைது நடவடிக்கைக்கு ஆளான தூய்மை பணியாளர்கள் அரசு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். போராட்ட களத்தில் இருந்து விலகி செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கி சென்றனர். பெண் தூய்மை பணியாளர்களை பெண் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரிப்பன் மாளிகை பகுதி முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த கைது நடவடிக்கையின் போது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கோவளம் நீர்தேக்க பணியை துவக்க தமிழக அரசு உத்தரவு-அப்ரூவலை அப்புறம் பார்த்துக்கலாம்

‘சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஜனவரியில் நீர்தேக்கத்தை திறக்கும் வகையில் வேலையை துவக்குங்கள்; மத்திய அரசு அனுமதியை அப்புறம் வாங்கிக்கொள்ளலாம்’ என, நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் வாயிலாக பூர்த்தியாகிறது. இந்த ஏரிகள், 13.2 டி.எம்.சி., கொள்ளவு உடையவை.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளால், சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், கூடுதல் நீராதாரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.இதற்காக, திருப்போரூர் அருகே பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, கோவளம் வடிநிலப்பகுதியில், 350 கோடி ரூபாயில் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும் என, இந்தாண்டு மார்ச்சில், தமிழக பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளுக்கு மத்தியில், இந்த புதிய நீர்தேக்கம் அமைய உள்ளது. இதற்காக, தமிழக உப்பு நிறுவனம் உட்பட அரசிற்கு சொந்தமான 4,735 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
நான்காவது தேசிய நீர்வழித்தடமாக பகிங்ஹாம் கால்வாயை மத்திய அரசு அறிவித்துள்ளதால், திருப்போரூர் அருகே கோவளம் வடிநிலப்பகுதியில் 350 கோடி ரூபாயில், புதிய நீர்தேக்கம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நீரை சுத்திகரித்து சோழிங்கநல்லுார், நாவலுார், மேடவாக்கம், பள்ளிக்கரை, சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, மாமல்லபுரம் வரையுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் எடுத்து செல்லும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

புதிய நீர்தேக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, நீர்வளத்துறை வாயிலாக விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு, மாவட்ட அளவில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மாநில அளவில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரைகளை பலப்படுத்தி நீரை தேக்கி, அடுத்தாண்டு ஜனவரியில் புதிய நீர்தேக்கத்தை திறக்க, நீர்வளத்துறை அவசரம் காட்டி வருகிறது. ஆனால், நீர்தேக்க திட்டத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து, நீரியல் வல்லுனர் ஒருவர் கூறியதாவது: நாடு முழுதும் உள்ள முக்கிய நீர்வழித்தடங்களில் படகு போக்குவரத்தை துவங்க, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நான்காவது தேசிய நீர்வழித்தடமாக பகிங்ஹாம் கால்வாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்றால், மத்திய ஜல்சக்தி அமைச்சக ஒப்புதல் பெற வேண்டும். இது குறித்து, அரசிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. திட்டத்தை அறிவித்துவிட்டு இப்போது ஒப்புதல் கேட்டால் கிடைக்காது. எனவே, ‘சப்தம் இல்லாமல் பணியை செய்யுங்கள்; அனுமதியை அப்புறம் வாங்கிக் கொள்ளலாம்’ என, அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.

அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஜனவரி மாதத்திலேயே புதிய நீர்தேக்கத்தை திறக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சப்தம் இல்லாமல் பணியை இப்போது துவக்கினாலும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறும்போது, இந்த தகவல் அம்பலமாகி, அரசுக்கு சிக்கலாகும். மேலும், புதிய நீர்தேக்கம் அமையவுள்ள இடத்தில் மழைநீருடன், கடல்நீர் தேங்கும். இந்த நீர்தேக்கத்தில், நல்ல நீரை எப்படி பிரித்து தேக்க போகின்றனர் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read More
குற்றம்தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகிறது-சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முறைகேடாக நடத்திய, இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் வறுமை காரணமாக பலர் தங்களின் சிறுநீரகத்தை விற்றது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது.

இது, தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரித்து, விரிவான அறிக்கை அளிக்க, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில், தமிழக அரசு குழுவை நியமித்தது.

இக்குழு கடந்த மாதம் 22ம் தேதி விசாரணையை துவக்கியது. திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், சிறுநீரக கொடையாளிகள் தொடர்பான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், ‘மனித உறுப்பு மாற்று சட்டம் 1994’க்கு முரணாக, தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து, நெருங்கிய உறவினர்கள் அல்லாத கொடையாளர்களிடம் பணத்திற்கு உறுப்புகளை பெற்றது தெரிய வந்தது.
விசாரணையை முடித்து, அறிக்கையை அரசிடம் வினீத் அளித்துள்ளார். அதை அரசு பரிசீலித்து, அதில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை:
திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்றவற்றில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் வழியே நடவடிக்கை எடுக்கப்படும்

விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, இரு தரகர்களான ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க, தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நான்கு அங்கீகார குழுக்கள் உள்ளன. இதை சீரமைத்து, மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கி, புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும், ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள குழுக்களை மறு சீரமைப்பு செய்யவும் உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும்
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களுக்கும், கொடையாளிகளுக்கும், தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் வழங்க, நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்த, மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும்

உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் குறித்து, உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழக எம்.பி.க்களை அந்தரத்தில் அலறவிட்ட ஏர்இந்தியா-விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் 5 எம்.பி.கள் உள்பட 181 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் AI 2455, நானும், பல எம்.பி.க்களும், நூற்றுக்கணக்கான பயணிகளும் இன்று பயங்கரமான துயரத்தை எதிர்கொண்டோம்.
தாமதமாக புறப்பட்டதாகத் தொடங்கிய பயணம், ஒரு துயரமான பயணமாக மாறியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நாங்கள் முன்னெப்போதும் இல்லாத பதற்றத்தில் சிக்கினோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கேப்டன் விமானத்தில் சிக்னல் கோளாறு இருப்பதாக அறிவித்து சென்னைக்குத் திருப்பி விடப்பட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், தரையிறங்க அனுமதிக்காக காத்திருந்தோம், விமானியின் முதல் முயற்சியின் போது எங்கள் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஓடுபாதையில் – மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நொடியில், கேப்டன் விரைவாக மேலே செல்ல முடிவு செய்ததால் விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட்டது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
திறமை மற்றும் அதிர்ஷ்டத்தால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க முடியாது. இந்த சம்பவத்தை அவசரமாக விசாரித்து, பொறுப்புணர்வை சரிசெய்யவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியோரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட இந்த ஏர்இந்தியா விமானத்தில் MPகளான கே.சி.வேணுகோபால், கொடிகுணில் சுரேஷ், அணில் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் என 5 எம்.பி.கள் உடன் 181 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் உடனடியாக சென்னையில் தரையிரக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனைவரும் டெல்லி புறப்பட்டனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அன்புள்ள திரு. வேணுகோபால், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னை விமான நிலையத்தில் முதல் தரையிறங்கும் முயற்சியின் போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால் அல்ல, சென்னை விமான போக்குவரத்து ஆணையத்தால் ஒரு சுற்றுப்பாதை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்கள் விமானிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மேலும் இந்த விஷயத்தில், அவர்கள் விமானம் முழுவதும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றினர். இதுபோன்ற அனுபவம் தொந்தரவாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் திருப்பி விடப்பட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை. உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
இந்தியாதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

சென்னை மெட்ரோ குறித்த கேள்விக்கு இணை அமைச்சர் பதில்-ரூ.3, 000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு…

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ 8,000 கோடிக்கும் அதிகமாக நிதியை விடுத்துள்ளதாகவும் 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தோகன் சாஹு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வெளியிடப்பட்ட நிதியைப் பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்திற்காக 2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 5,219.57 கோடியை விடுத்தது. இதன் நெட்வொர்க் நகரத்தின் முக்கிய பகுதிகளை அதன் மூன்று வழித்தடங்களுடன் இணைக்கும் – மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை. 2025-2026 ஆம் ஆண்டில், மத்திய ரூ. 8,445.8 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், ரூ. 3,000 கோடி இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை : தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுண்டரில் பலி

எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் இன்று குடிமங்கலத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குள் செவ்வாய் கிழமை இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மூர்த்தியை இரண்டு மகன்களும் கடுமையாக தாக்கி, அரிவாளுடன் துரத்தியதாக தெரிகிறது.
தகவல் அறிந்து ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கு சென்றார். அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது, மூவரும் இணைந்து உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்துள்ளனர். சண்முகவேலுடன் வந்த ஓட்டுநரையும் அவர்கள் அரிவாளுடன் துரத்திய நிலையில், தப்பிச் சென்ற அவர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தந்தை மூர்த்தி, மகன் தங்கப்பாண்டியன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். மற்றொரு மகனான மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் சிக்கலூர் அருகே ஒப்பாறு ஓடையில் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மணிகண்டன் பிடித்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“தமிழ்நாட்டிற்கு ரூ. 3 லட்சம் கோடி.. காங்கிரஸைவிட 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருக்கிறோம்” – பிரதமர் 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்” என பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் பேசினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் நினைவுப் பரிசை வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத் திறப்பு விழாவிற்கு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்துவந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, “நான்கு நாள் அயல்நாட்டுப் பயணத்திற்குப் பிறகு நேரடியாக பகவான் ராமேஸ்வரனின் மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பகவான் ராமேஸ்வரன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு தூத்துக்குடி வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி இவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை. இந்த 11 ஆண்டுகளில் இந்தத் துறைகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நமக்கு முதன்மையானது என்பதை காட்டுகிறது.
இதே மண்ணில் தான் வா.உ.சி. போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்துகொண்டவர் அவர். காசி தமிழ் சங்கம் போன்ற ஏற்பாடுகள் மூலம் நம் கலாச்சார மரபுகளை வளர்த்துவருகிறோம். தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகம் முழுக்க பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்துவந்தது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியில் உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் நமது வேகம் இன்னும் வேகமளிக்கப்போகிறது. இங்கிலாந்து ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்கப்படும் 99% பாரதத்தின் பொருட்கள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது. விலை மலிவாகவும், தேவை அதிகமாகவும் அங்கு இருக்கும். இங்கு அந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் நமது இளைஞர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.
மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம். இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கும் அரசு வலு சேர்க்கிறது. ஆபரேஷன் சிந்துரின்போது, மேக் இன் இந்தியாவின் வலுவை பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை அழித்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்தின் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தூங்கவிடாமல் செய்கிறது.
தூத்துக்குடி புது முனைய திறப்புக்கு பிறகு தமிழ்நாட்டின் பெரும் நிறுவனங்கள், உடல்நல கட்டமைப்புகள், கல்வி ஆகியவற்றுக்கு வலு கிடைக்கும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சாலை ஆகியவற்றையும் சிறப்படைய செய்யும். அதுமட்டுமின்றி, வர்த்தகம் வேலை வாய்ப்பு ஆகியவையும் அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்.
இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்றுவருகிறது. தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே உள்ளது. 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் வரிசையில் தமிழ்நாடு மக்களுக்கு புது அனுபவம் கிடைத்துவருகிறது. தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம்; பாம்பன் பாலம் கூட தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை போட்டிநாயக்கநல்லூர் மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன் மூலம், வந்தே பாரத் ரயில் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு வளர்ச்சி, மேம்படுத்த தமிழ்நாடு ஆகியவையே நமது முக்கிய உறுதிப்பாடு. நாங்கள் தமிழ்நாடு வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என பேசினார்.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

தனுஷின் ‘அம்பிகாபதி’ ரீ-ரிலீஸ் சர்ச்சை!‘ஏஐ’ க்ளைமாக்ஸ் 

தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘ராஞ்சனா’. இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
படம் இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்கும் வகையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட்டது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது படத்தின் க்ளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் ஏஐ துணையுடன் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவது போல க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கண்டனம் தெரிவித்தார். படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘அம்பிகாபதி’ (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாக இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.
முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது ‘புதிய பதிப்பாக’ தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.
இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கமல்ஹாசன், உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் இன்று பதவியேற்பு…

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் உட்பட ஆறு மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், சண்முகம், என். சந்திரசேகரன், முகமது அப்துல்லா, ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி, இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானார்கள். அதேபோல அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் உட்பட ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களும் இன்று பதவியேற்க உள்ளனர். முன்னதாக நேற்று பதவிக்காலத்தை நிறைவு செய்த வைகோ, அன்புமணி ராமதாஸ் உட்பட 6 எம்.பிக்களுக்கும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

PF விதிகளில் முக்கிய மாற்றம்..

மாத வருமானம் பெறும் நபர்கள் தங்களுடைய PF அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு இனியும் பணி ஓய்வு பெறும் வரையோ அல்லது வேலையை இழக்கும் வரையோ காத்திருக்க தேவையில்லை. EPFO நிறுவனம் அளித்த பரிந்துரையின் பெயரில், PF பணத்தை வித்டிரா செய்வதற்கான விதிகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால். இனி வரும் காலத்தில் சப்ஸ்க்ரைபர்கள் தங்களுடைய EPF பணத்தை முழுமையாகவோ அல்லது 10 வருடங்களுக்கு ஒருமுறையோ பிரித்து எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இப்போது உள்ள சூழ்நிலையில் EPF மெம்பர்கள் தங்களுடைய முழு PF பணத்தையும் பணி ஓய்வுக்குப் பிறகு மட்டுமே எடுக்க முடியும். இது வழக்கமாக 58 வயதில் அவர்களுக்கு கிடைக்கிறது. ஒருவேளை தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் அவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் EPF பணத்தை வித்டிரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் வீடு வாங்குவது, மருத்துவ செலவு, கல்வி அல்லது திருமணம் போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்கு PF தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை வித்டிரா செய்து கொள்ளலாம்.
இந்த மாதம் முதலில் இருந்து EPF மெம்பர்கள் தங்களுடைய சேமிப்புகளில் 90% பணத்தை நிலம் வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, EPF அக்கவுண்டில் தொடர்ச்சியாக 5 வருட காலத்திற்கு பங்களித்தவர்களுக்கு மட்டுமே இந்த பலன் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது இதற்கான தகுதி என்பது வெறும் 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தங்களுடைய சேமிப்புகளை வீடு வாங்குவதற்கு பயன்படுத்துவது மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக EPF வித்டிரா எப்படி இயங்கியது?
பின்வரும் காரணங்களுக்காக மட்டுமே EPF மெம்பர்கள் முழு PF தொகையையும் வித்டிரா செய்யும் வகையில் இருந்தது.
பணி ஓய்வுக்கு பிறகு 58 வயது
உறுப்பினர் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால்
PF தொகையில் ஒரு பகுதியை பின்வரும் காரணத்திற்காக வித்டிரா செய்து கொள்ளலாம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள EPF விதி என்ன?
இப்போது தொடர்ச்சியாக 3 வருட காலம் PF அக்கவுண்டில் பங்களித்த மெம்பர்கள் தங்களுடைய EPF பேலன்ஸில் இருந்து 90 சதவீத தொகையை வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, இது 5 வருடமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், அட்வான்ஸ் கிளைம் செய்வதற்கான உச்சவரம்பு என்பது 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முன்கூட்டிய அப்ரூவல் இல்லாமல் பணத்தை விரைவாகவும் எளிமையாகவும் வித்டிரா செய்து கொள்ளலாம்.

Read More