Tamilnadu

சினிமாதமிழ்நாடு

ஏன் என்னை ஏதோ செய்தாய்….திரை விமர்சனம்…..

சிறுவயதிலேயே தாயை இழந்த இளைஞன் ஒருவன் நகரத்திற்கு வந்து மதுவுக்கு அடிமையாகி தன் வாழ்க்கையில் எல்லாவிதமான கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகிஅந்த பழக்கத்தில் மூலம் ஒரு காதல்… உருவாகிறது ,அந்த காதலில் அவர் வெற்றியடைந்தாரா இல்லையா என்பதுதான் படம், இன்றைக்கு உள்ள உள்ள லைப் ஸ்டைலில் இளைஞர்கள் எப்படி பேச்சிலராக வாழ்கிறார்களோ அப்படி படம் முழுக்க இயல்பான டயலாக்,… படத்தில் எப்பொழுதுமே மயிறு மட்டை போன்ற கெட்ட வார்த்தைகள், பெண்கள் காதை பொத்திக் கொள்ளும் அளவிற்கு நாசரமாய் வசனங்கள்…. (இதெல்லாம் அந்த படத்திற்கு தேவை போல) டி ஆண்டனி இந்த படத்தை எழுதி இயக்கி நடித்து தயாரித்தும் உள்ளார், மதுமிதா தாஸ் கதாநாயகியாக ஜொலிக்கிறார் மற்றபடி படத்தில் சொல்லும் அளவுக்கு ஏதுமில்லை படத்தின் இசை நன்றாக உள்ளது… கதாநாயகன் படம் முழுக்க மதுவையும் சிகரெட்டையும் குடித்து தள்ளுகிறார்…
மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படம் என்பதால் எங்கு பார்த்தாலும் எல்லாமே மிகவும் குறைவாக தெரிகிறது….. எதற்காக கதை இறுதியில் கதாநாயகி ஆக்சிடென்ட்டில் இறந்தார் என்று வைத்தார்கள்… என்று புரியவில்லை…. சோகமான கிளைமாக்ஸ் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை….திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது படத்தை இளைஞர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை….என்னை ஏன் வச்சு செய்தாய் என்று என்ன தோன்றுகிறது….

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை…

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது கடந்த வியாழக்கிழமை விவாதம் தொடங்கியது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர். உதயநிதி பேசும்போது குறுக்கிட்ட முதலமைச்சர் திங்களன்று விரிவாகப் பதில் அளிப்பதாகக் கூறியிருந்தார்.
இன்று பேரவை கூடியதும் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்திருத்த முன்வடிவை முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசவுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளிக்கிறார். எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீரழிவு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார்.

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்ற ஆட்சியில் போராடிய விவசாயிகள்,ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் விஜய் நேற்று பேசியதாவது: தவெக அரசு பொறுப்பேற்ற மே 10-ம் தேதி முதல், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாக சேவையாற்றி வருகிறது. மக்களின் கருத்துரிமை, போராட்ட உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை மதித்து, சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான சூழலை இந்த அரசு உறுதிப்படுத்தி வருகிறது.

ஆனால், கடந்த திமுக ஆட்சி காலங்களில் தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம்ஆண்டு ஏப்ரல் வரை ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜனநாயக முறையில் குரல் கொடுத்த மக்களுக்கு உரிய அனுமதிகள் மறுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளால் இன்று வரையிலும் மிகுந்த சிரமத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
விவசாயிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், உணவு பாதுகாப்புக்கும் அடிப்படையாக விளங்கும் சமூகத்தின் முதுகெலும்பாகப் போற்றப்பட வேண்டியவர்கள். அவ்வாறான விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனிதநேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், கல்வியின் ஒளியை ஏற்றி சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள் நாட்டு வளர்ச்சியின் அடித்தளமாக உள்ளனர்.
ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் போராடிய போதும், அவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஜனநாயக உரிமைகளை மதிக்கும் இந்த அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையிலும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது என்பதை இந்த பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் இந்த அரசு உறுதுணையாக நிற்கும். இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

IMMORTAL-இம்மார்டல்’Audio Launch

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், மாரிப்பன் சின்னா இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ (Immortal) படத்தின் பிரீ-ரிலீஸ் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய படக்குழுவினர், இதுவொரு வித்தியாசமான சூப்பர் நேச்சுரல் ஹாரர் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படம் என்று தெரிவித்தனர். ஜி.வி.பிரகாஷ் மற்றும் சாம் சி.எஸ் கூட்டணியின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் பெரிய பலமாக இருக்கும்
வரும் செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்வு ஆன்லைனில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இது இந்த ஆண்டின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இந்த வருடம் இசையமைத்த யூத், இருமுடி, ஹாப்பி ராஜ், விஸ்வநாத் & சன்ஸ் என பல படங்கள் ஹிட் அடித்துள்ளன

Read More
disasterஇந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நேபாள பெருவெள்ளத்தில் இதுவரை 810 பேர் உயிரிழப்பு…மீட்புப் பணி தொடர்கிறது

கடந்த 26-ம் தேதி இமயமலை​யில் பனிமலைகள் உடைந்து நேபாள நதி​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த நாட்​டின் ரசு​வா, தாதிங், நுவாகோட், கோர்க்​கா, டானாஹன், நவல்​பூர், பராசி, சிட்​வான் ஆகிய 8 மாவட்​டங்​கள் மிக கடுமையாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. நேபாளம் – சீனா இடையிலான பிர​தான நெடுஞ்​சாலை வெள்​ளத்​தில் அடித்துச்செல்லப்​பட்​டது.
பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்​துள்​ளது. சுமார் 3,000-க்​கும் மேற்பட்டோரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்படுத்​தப்​பட்டு உள்​ளது.
ஐந்​தாவது நாளாக நேபாளத்​தில் நேற்று மீட்​புப் பணி​கள் நடைபெற்​றன. அந்த நாட்​டின் நீர் மின் திட்​டங்​களில் பணியாற்றிய 898 தொழிலா​ளர்​களை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இதற்​காக இந்​திய நிபுணர் குழு நேற்று முன்​தினம் நேபாளம் சென்​றது. அங்கு திரிசூலி 3ஏ நீர்​மின் திட்​டப் பகு​தி​யின் சுரங்​கத்​தில் சுமார் 400-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் சிக்கி உள்​ளனர்.

சுரங்​கம் முழு​வதை​யும் சகதி மூடி​யிருப்​ப​தால் மீட்​புப் பணி​யில் பெரும் சிரமம் ஏற்​பட்​டிருக்​கிறது. நேபாளம் சென்ற இந்​தி​யக் குழுவினர் நேற்று முதல் கட்​ட​மாக 6 அங்​குலம் அளவுக்கு சுரங்கத்தில் துளை​யிட்டு ஆக்​சிஜன் செல்ல வழியை ஏற்​படுத்தி உள்​ளனர். மேலும் ஒரு நபர் நுழை​யும் அளவுக்கு சுரங்​கத்​தின் பக்க​வாட்​டில் 4 இடங்​களில் துளை​யிட பணி​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. இதன்​மூலம் சுரங்​கத்​துக்​குள் சென்று தொழிலாளர்களை மீட்க முடி​யும் என்று இந்​திய நிபுணர்​கள் நம்​பிக்கை தெரிவித்துள்ளனர்.
வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் இருந்து இது​வரை 810 உடல்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன. மிக அதி​கபட்​ச​மாக சிட்​வான் மாவட்​டத்​தில் 248 உடல்​கள் மீட்​கப்​பட்​டிருக்​கிறது. கட்​டிட இடி​பாடு​களில் சிக்​கிய நூற்​றுக்​கணக்​கானோர் காயமடைந்து உள்​ளனர்.அவர்​கள் காத்மாண்டு உட்பட பல்​வேறு நகரங்​களின் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறுகின்​றனர். ஆயிரக்​கணக்​கானோர் நிவாரண முகாம்​களில் தஞ்​சமடைந்து உள்​ளனர். மேலும் வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் ஹெலி​காப்​டர், ட்ரோன்​கள் மூலம் உணவு பொட்டங்கள், குடிநீர் பாட்​டில்​கள் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

நீர் மின் நிலைய திட்ட தொழிலா​ளர்​கள் உட்பட சுமார் 3,000-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இந்​தி​யா​வின் சார்​பில் தடவியல் மற்​றும் மரபணு ஆராய்ச்சி நிபுணர்​கள் நேபாளத்​துக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளனர். அடை​யாளம் தெரி​யாத நபர்​களின் உடல்​களை அவர்கள் மரபணு சோதனை செய்து உறவினர்​களிடம் ஒப்​படைக்க உதவி செய்​வார்​கள் என்று இந்​தி​ய வெளி​யுறவுத்​ துறை தெரிவித்துள்​ளது.

Read More
TVKஅரசியல்ஆன்மீகம்இந்தியாதமிழ்நாடு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்…

நே​பாள வெள்​ளத்​தில் சிக்​கிய தமி​ழர்​களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்​ஜூனா உட்பட 4 அமைச்​சர்​கள் நேற்று டெல்​லி விரைந்தனர். மேலும் கும்​பகோணத்​தில் இருந்து சென்ற 36 பேரை மீட்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

நேபாள வெள்ளத்தில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தைச் சேர்ந்த ‘சூப்​பர் யாத்ரா டிராவல்​ஸ்’ நிறு​வனம் மூலம் கடந்த 23-ம் தேதி இரவு கைலாய யாத்​திரைக்​குச் சென்​றுள்​ளனர். அவர்​களும் வெள்​ளத்​தில் சிக்கி உள்​ளனர். எனினும், வெள்​ளத்​தில் இருந்து தப்​பிய 20 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

இதற்​கிடை​யில், வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களில் கடலூரைச் சேர்ந்த திரு​மாவளவன் (62) என்​பவர் நேற்று பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டார். மீட்​கப்​பட்ட 21 பேரும் தற்​போது திரிசூலி பகு​தி​யில் பாது​காப்​பாகத் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். மீத​முள்​ள 36 பேரைத் தேடும் பணி​யில் இந்​தி​யா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடு​களைச் சேர்ந்த 15-க்​கும் மேற்​பட்ட ஹெலி​காப்​டர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன.
நேபாளத்​தில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களை மீட்​பது தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நேபாளத்​துக்​குத் தமி​ழ​கத்​தைச் சேர்ந்த 103 பேர் கைலாஷ் யாத்​திரைக்​காக 2 குழுக்​களாகச் சென்​றுள்​ளனர்.

நேபாளத்​தில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் தமி​ழர்​கள் உட்பட பலர் காணா​மல் போயுள்ளனர். இப்​பேரிடரில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களை மீட்க மத்​திய வெளி​யுறவுத் துறை, நேபாளத்​தில் உள்ள இந்​தி​யத் தூதரகம், டெல்லி தமிழ்​நாடு இல்ல அரசு உயர் அலு​வலர்​கள் மற்​றும் பயண முகவர் நிறு​வனங்​களின் உதவி​யுடன் துரித நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.
டெல்லி தமிழ்​நாடு இல்ல உள்​ளுறை ஆணை​யர் ஆசிஷ் குமார் தலை​மையி​லான குழு​வினர் நேபாளத்​துக்கு சென்று மீட்​புப் பணி​களை ஒருங்​கிணைக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டார். மீட்​கப்​பட்​டுள்ள 21 தமி​ழர்​களை தாயகம் அழைத்து வர ஏற்​பாடு​ செய்​ய​வும், தொடர்பு கொள்ள இயலாதவர்​களின் நிலை​யைக் கண்​டறிந்து மீட்​புப்பணி​களைத் துரிதப்​படுத்​த​வும் உத்​தர​விட்​டுள்​ளார்.

பொதுப்​பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, பள்​ளிக் கல்வி அமைச்​சர் ராஜ்மோகன், வெளி​நாடு வாழ் தமி​ழர் நலத்​துறை அமைச்​சர் க.தென்​னரசு, வேளாண் துறை அமைச்​சர் ர.வினோத் மற்​றும் அயல​கத் தமி​ழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை இயக்​குநர் ரெ.சதீஸ் ஆகி​யோர் டெல்லி தமிழ்​நாடு இல்​லத்​தில் முகாமிட்​டு, மீட்​புப் பணி​கள் தொடர்​பான நடவடிக்​கை​களை மேற்​பார்​வை​யிடு​வதுடன், நேபாளத்​தில் இருந்து மீட்​கப்​பட்ட தமி​ழர்​களுக்​குத் தேவை​யான மருத்​துவ உதவி​கள் வழங்​க​வும், அவர்​களைப் பத்​திர​மாகத் தமி​ழ​கம் அழைத்து வரவும் நடவடிக்​கை​களை மேற்​கொள்ள முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இவ்​வாறு தமிழக அரசு அறிக்​கை​யில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 4 அமைச்சர்களும் நேற்று டெல்லி விரைந்தனர்.
நே​பாள வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மாய​மான 1,500 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது. நிவாரணப் பொருட்​களு​டன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்​துக்கு இந்​தியா அனுப்​பியது.

மலைப்​பிரதேச​மான நேபாள நாட்​டின் வடக்கே திபெத் எல்லை உள்​ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்​டத்​தில் போடே கோசி என்ற நதி ஓடு​கிறது. இந்த நதி​யில் நேற்று முன்​தினம் காலை திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

பல அடி உயரத்​துக்​குக் கீழ் நோக்கி பாய்ந்த இந்த பெரு​வெள்​ளம் ரசு​வா, தாதிங் மற்​றும் நுவாகோட் ஆகிய 3 மாவட்​டங்​களைப் புரட்​டிப் போட்​டது. வானுயர்ந்த கட்​டிடங்​கள், சாலை​கள், பாலங்​கள், நீர்​மின் நிலை​யங்​கள் என அனைத்​தை​யும் வெள்​ளம் சுருட்​டிச் சென்​றது.

இடி​பாடு​களு​டன், சேறும் சகதி​யு​மாய் பாய்ந்​தோடிய வெள்​ளத்​தில் ஏராள​மான மக்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மேலும், 800 வெளி​நாட்​டினர் உட்பட 1,500-க்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்​ளள்​ள​தாக நேபாள அரசு நேற்று தெரி​வித்​தது.

Read More
அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நேபாளத்தின் திடீர் வெள்ளப்பெருக்கு ….வரலாறு காணாத சோகம் ….

நேபாளம் நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 50 பேரும் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளம் – திபெத் பகுதியில் கடும் மழை மற்றும் பனிப்பாறைகள் கரைந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் மலை பகுதிக்குக் கீழே இருந்த கிராமங்கள், பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு திடீர் வெள்ளத்திற்குக் காரணம் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.வெள்ளப் பெருக்கு குறித்து நேபாளம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேபாளம் – சீனா இடையிலான ரசுவாகதி எல்லையின் வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் இமயமலையில் உள்ள பனிப்பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பனிப்பாறை லெண்டே ஆற்றில் கலந்ததால், இந்தக் கோர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம், ராசுவா பகுதியில் தொடர் மழை காரணமாக போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 50 பேரும் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளம் – திபத் பகுதியில் கடும் மழை மற்றும் பனி பாறைகள் கரைந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் மலை பகுதி கீழே இருந்த கிராமங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மூன்று பேருந்துகளில் அப்பகுதியில் சுற்றுலாவில் இருந்துள்ளனர்.
50க்கும் மேற்பட்டோர் சென்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. நல்வாய்ப்பாக அவர்கள் தப்பித்து காத்மாண்டுவில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள திமுர் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். இது குறித்து தப்பித்தவர்கள் ஒரு குரல் பதிவையும் வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து அவர்களை தொடர்புகொள்ளும் பணி தற்போது தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெருமளவிலான உயிரிழப்புகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ள சூழலில், நேபாள பிரதமா் பாலேந்திர ஷாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் போட்டே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு நேபாள அரசை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், சமூக வலைத்தளப் பதிவில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த இக்கட்டான தருணத்தில் இந்திய மக்கள் அனைவரும் தங்கள் நேபாளச் சகோதர சகோதரிகளுடன் உறுதியாகத் துணை நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

3 தமிழர்கள் கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்….

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்
ர்​நாடக வனப்​பகு​தி​யில் 3 தமி​ழர்​களும் அரு​கில் இருந்து சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளனர் என்று பிரேதப் பரி​சோதனை அறிக்​கை​யில் தெரிய வந்​துள்​ளது. இதனால் இந்த வழக்கை சிஐடி விசா​ரணைக்கு மாற்றி கர்​நாடக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.
கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15-ம் தேதி அதி​காலை​யில் அந்​தோணி​சாமி (50), ஜான் ரோஸ் பீட்​டர் (42), லாசர் டேவிட் குமார் (33) ஆகிய மூவ​ரும் வனத்​துறை​யின​ரால் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர். இந்​தச் சம்​பவத்​தைக் கண்​டித்து ஹனூரில் பாதிக்​கப்​பட்​டோரின் உறவினர்​களும், கிரா​மத்​தினரும் போராட்​டத்​தில் குதித்​த​தால் பதற்​றம் ஏற்​பட்​டது.
இதையடுத்து வனத்​துறை நிர்​வாகம், ‘மான் வேட்​டை​யாட சென்ற மூவ​ரும் வனத்​துறை​யினர் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். தங்​கள் உயிரைக் காப்​பாற்றி கொள்​வதற்​காக வனத்​துறை​யினர் திருப்பி சுட்​ட​தால் மூவ​ரும் உயி​ரிழந்​தனர்’ என்று தெரி​வித்​தனர். இதை உறவினர்​கள் ஏற்​க​வில்​லை. இந்​தச் சம்​பவத்​துக்குத் தமிழக முதல்​வர் விஜய், முன்​னாள் முதல்​வர்​கள் மு.க.ஸ்​டா​லின், எடப்​பாடி பழனி​சாமி உள்​ளிட்ட தமிழக
அரசி​யல் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.
இதுகுறித்து விசா​ரணை நடத்த கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் உத்​தர​விட்​டார். அதன்​பின், வனத்​துறை​யினர் 7 பேர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.3 பேர் சுட்​டுக்கொல்​லப்​பட்ட ஷாக்யா வனப்​பகு​தி​யில், கொள்​ளே​கால் துணை ஆணை​யர் தினேஷ் குமார் மீனா தலை​மை​யில் போலீ​ஸாரும், வனத்​துறை அதி​காரி​களும் ஆய்வு மேற்​கொண்​டனர்.

அங்கு சிதறிக் கிடந்த பொருட்​களைச் சேகரித்​தனர். வனத்​துறை ஊழியர்​கள் ஷிவ​ராஜ், சேகரை​யா, அனில்​கு​மார் உள்​ளிட்ட 7 பேரை​யும், இந்த துப்​பாக்​கிச் சூட்​டில் உயிர்த் தப்​பிய மகிமை தாஸை​யும் துணை ஆணை​யர் தினேஷ் குமார் மீனா விசா​ரித்​தார்.

மேலும், கொல்​லப்​பட்ட 3 பேரிட‌ம் இருந்து 2 நாட்​டுத் துப்​பாக்​கி​கள், 3 கத்​தி​கள், 2 செல்​போன்​கள், கட்​டிங் பிளேயர், ஸ்குரு டிரைவர், 2 பைகள், வெங்​கா​யம், தக்​காளி, சமையல் பாத்​திரங்​கள், 2 பைகளில் மான் இறைச்​சி, ஒரு ஜோடி ஹவாய் செருப்பு ஆகிய​வற்றை கைப்​பற்​றிய​தாக வனத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.வனத்​துறை வெளி​யிட்ட புகைப்​படத்​தில் இடம்​பெற்ற, ஸ்டிக்​கர் பிரிக்​காத புதிய காலணி பலத்த சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. அந்​தோணி​சாமி​யின் மனைவி லூர்​து​ மேரி, ‘இர​வெல்​லாம் காட்​டில் அலைந்​தவரின் செருப்​பில் மண் கூட ஒட்டி இருக்​கா​தா?’ என்று கேள்வி எழுப்​பி​னார்.வழக்​கின் நேரடி சாட்​சி​யான மகிமை தாஸ், “வனத்​துறை​யினர் மிக​வும் அரு​கில் இருந்து துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். மலைப் பகு​தி​யில் இருந்து கீழே குதித்து உயிர் தப்​பினேன். என்னை வனத்​துறை​யினர் விசா​ரணைக்கு அழைத்​து, சாட்சி சொல்ல வைக்க முயற்​சிக்​கின்​ற​னர். அவர்​கள் சொல்​வதைப் போல சொல்​லா​விட்​டால், என்னை வழக்​கில் சிக்க வைத்து விடு​வார்​களோ என்று அச்​ச​மாக இருக்​கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்​கிறது” என்று வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்​தார்.

இந்​தச் சூழ்​நிலை​யில், கொல்​லப்​பட்ட 3 பேரின் பிரேதப் பரி​சோதனை கடந்த 16-ம் தேதி மைசூரு​வில் உள்ள கே.ஆர். அரசு மருத்​து​வ​மனை​யில் நடத்​தப்​பட்​டது. பிரேதப் பரி​சோதனை அறிக்​கை​யில், “இறந்த 3 பேரும், 10 அடிக்குக் குறை​வான தூர‌த்​தில் இருந்து சுடப்​பட்​டுள்​ளனர்.

ஜான் ரோஸ் பீட்​டரின் இடது காது பகு​தி​யில் இருந்து மார்பு பகுதி வரை சுமார் 28 செ.மீ. நீளத்​துக்கு ஆழமான காயம் ஏற்​பட்​டுள்​ளது. அந்​தோணி​சாமி, லாசர் டேவிட் குமார் ஆகி​யோரின் வலது மார்​பு, தொடை ஆகிய இடங்​களில் ப‌லத்த காயம் ஏற்​பட்​டுள்​ளது.

லாசட் டேவிட் குமார் உடலில் வல‌து மார்​புப் பகு​தி​யில் 8.5 செ.மீ. வலது தொடை​யில் 13 செ.மீ. ஆழத்​துக்​குக் காயம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் மிக அரு​காமை​யில் இருந்து சுடப்​பட்​டது உறு​தி​யாகிறது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.ர்​நாடக காவல் துறை தலைமை இயக்​குநர் மற்​றும் காவல் துறை இன்​ஸ்​பெக்​டர் ஜெனரல் (டிஜி அண்ட் ஐஜிபி) சலீம், “மூன்று பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்ட வழக்கு சிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​படு​கிறது” என்று நேற்று உத்​தர​விட்​டார். இதையடுத்து துணை காவல் ஆணை​யர் தினேஷ் குமார் மீனா தலை​மையி​லான விசா​ரணைக் குழு​வின் அறிக்​கை​கள் சிஐடி போலீ​ஸாருக்கு அனுப்ப, சாம்​ராஜ் ந‌கர் காவல் கண்​காணிப்​பாளருக்கு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

காவிரி நீர்: கர்நாடகா 9,000 கன அடி நீர் திறக்க ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி நீர் திறப்பதற்கு கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கர்நாடக அணைகளில் 68 டி.எம்.சி. நீர் இருப்பதால் ஒரு நாளைக்கு 1.9 டி.எம்.சி. நீர் திறப்பதற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்காத காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் அறிவிப்பு….

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாக்கும் நோக்கில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக 2026 ஆகஸ்ட் 24 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன்க கீழ் அறிவித்தார்.முதல்வர் விஜயின் அறிவிப்பு மற்றும் காரணங்கள்பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கும் என்பதால் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.இத்திட்டம் கைவிடப்படுவதாகவும், அப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
மாற்றுத் திட்டங்கள் என்ன?சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வடமேற்கு பகுதியில் புதியதாக 5-வது முனையம் (Terminal 5) உருவாக்கப்படும்.சென்னைக்கு அருகில் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்று இடத்தில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க விரிவான திட்டமிடل செய்யப்படும்.எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புபரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் பின்னடைவு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.விவாதிக்க அனுமதி வழங்கப்படாமல் விதி 110-ன்க கீழ் திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.பரந்தூர் விமான நிலையம் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டது. இதில் சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலமும், மீதமுள்ள பரப்பில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, வருவாய், வனம் மற்றும் பிற துறைகளுக்கு சொந்தமான அரசு நிலமும் உள்ளது. திட்டத்திற்கு ரூ. 27,400 கோடி.

தி.மு.க., ஆட்சியில், பரந்தூர் திட்டத்திற்காக, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தாலுகாவில், ஏகனாபுரம் கிராமம் தவிர்த்து, 1,000 நாட்களுக்கு மேலாக, 1,000 நாட்களுக்கும் மேலாக, அப்பகுதி மக்கள் போராடி வரும் 12 கிராமங்களில், மொத்தம், 1,700 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டது
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடும் முடிவுக்கு பதிலளித்த திமுக செயல்தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்த முடிவு தமிழகத்தின் வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளும் என்றும், இது பெரும் ஏமாற்றம் என்றும், மீள முடியாத பின்னடைவு என்றும் கூறினார்.

முந்தைய திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், நிலம் கையகப்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிந்து, ஏற்கனவே பல ஆயத்தப் பணிகள் மற்றும் ஒப்புதல்கள் கிடைத்துள்ள நிலையில், மாற்று இடங்களை மதிப்பீடு செய்து கவனமாகத் திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தை கைவிட்டுவிட்டு, வேறொரு இடத்தில் பணியைத் தொடங்குவது, வளர்ச்சியை தாமதப்படுத்துவதுடன், தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையையும் பாதிக்கும் என்றார் ஸ்டாலின்.

Read More