Tamilnadu

TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இன்றைய சட்டமன்றத்தில் முக்கிய துறைகளின் மீதான விவாதம்…

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சொத்து வரி உயர்வு, மழைக்காலத்தை எதிர்கொள்ள செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வி துறையை பொருத்தவரையில் தவெக நிர்வாகிகள் பள்ளிகளில் சென்று ரிலீஸ் எடுப்பது, திருவெற்றியூரில் பள்ளி மாணவர் கொலை உள்ளிட்ட பிரச்சனைகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்கல்வித்துறையில் இடதுசாரி மாணவர்கள் மற்றும் சிஜேபி போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை, கோவை கல்லூரி மாணவர் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சட்டப்பேரவை அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.

வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் தரமான வணிகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படம் இது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சமீப காலமாக தரமான கதைகளுக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, “தலைவர் தம்பி தலைமையில்” மற்றும் “TN 2026” முதலாக பல வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில், இந்தப் படத்தையும் கதைக்கும் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், குடும்ப உணர்வுகள், ஆக்சன், கிரைம், எமோஷன் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ரசிகர்களை கவரும் திறமையால் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். நான் மகான் அல்ல, பாண்டியநாடு வெற்றிப் படங்களைப் போல அப்பா–மகன் உறவை மையப்படுத்தி, மீண்டும் அதே பாணியில் விறுவிறுப்பும் உணர்வுகளும் நிறைந்த கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சுசீந்திரன் – சாந்தனு பாக்யராஜ் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி எஸ் இசை மற்றும் மதுரை பின்னணியில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியானதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

Paris Cafe Audio Launch…@Prasadlab….

பாரிஸ் கஃபே அறிமுக இயக்குநர் சரஜ் சீலன் இயக்கத்தில், எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ள, வெளிவரவிருக்கும் ஒரு தமிழ் இசை சார்ந்த காதல் நாடகத் திரைப்படமாகும் . இப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,
இப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா, 2026 ஆகஸ்ட் 17 அன்று, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்முன்னணி நடிகர்கள்: குரு சோமசுந்தரம், அனுமோல்துணை நடிகர்கள்: அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி மற்றும் நயனா சாய்இயக்குனர்: சரஜ் சீலன்தயாரிப்பாளர்: கண்மணி ரங்கநாதன் (எல்வி என்டர்டெயின்மென்ட்)இசையமைப்பாளர்: கே. கிருஷ்ண குமார் (கே)ஒளிப்பதிவு: சதீஷ் ஜி.தொகுப்பாளர்: வி.ஜே. சாபு ஜோசப்
மருத்துவரான கௌதம் மற்றும் சமூக ஆர்வலரான தாரா ஆகியோரின் வலுவான பிணைப்பு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு உண்மையால் சோதிக்கப்பட்டு உடைக்கப்பட்டு, அவர்கள் பிரிவதை இப்படம் சித்தரிக்கிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு….

காவிரி​யில் தமிழகத்​துக்கு உரிய தண்​ணீரைக் கர்​நாடக அரசு திறந்து விடக் கோரி​யும் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்க வேண்​டும் என்ற உத்தரவை

எதிர்த்​தும் தமிழக அரசு தாக்​கல் செய்த மனு மற்​றும் திமுக தொடர்ந்த மனு ஆகியவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன.
கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்தரவின்​படி, தமிழகத்​துக்​குக் காவிரி​யில் தண்​ணீர் திறக்க வேண்டும்’’ என்று கர்​நாடக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.
அப்​போது தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்.வைத்தி​ய​நாதன் ஆஜராகி, ‘‘கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தர​வு​களைக் கர்​நாடக அரசு எப்​போதும் செயல்படுத்துவதில்லை. தற்​போது கர்​நாடக அணை​களில் 76 சதவீதம் அளவுக்குத் தண்​ணீர் இருப்பு இருந்​தும், தமிழகத்​துக்கு உரிய நீரை திறக்​காமல் இருப்​ப​தால் தமிழகம் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

கர்​நாடக அரசு மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான், ‘‘இந்த ஆண்டு கடும் வறட்சி நில​வு​கிறது. காவிரி ஒழுங்​காற்​றுக் குழு​வின் பரிந்​துரை​யின்படி காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் அனைத்​தும் பின்​பற்​றப்​பட்​டன. முதலில் கடந்த ஜூலை 30-ம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், அதை விட அதி​க​மான நீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டது. நேற்று காலை 8 மணி நில​வரப்​படி வினாடிக்கு 12,000 கன அடியை விட அதி​க​மான அளவு தண்​ணீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.
‘‘கர்​நாடகா சார்​பில் அதிகளவி​லான நீர் திறக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் எப்​படி தண்​ணீர் வரவில்லை என்று கூறுகிறீர்​கள்​?’’ என்று தமிழக அரசு வழக்​கறிஞரிடம் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்​கறிஞர், ‘‘கட​வுள் அருளால் சமீபத்​தில் கபினி உள்​ளிட்ட பகு​தி​களில் மழை அதி​க​மாகப் பெய்​த​தால் கிடைத்த உபரி நீரை மட்​டுமே கர்​நாடகா திறந்​து​விட்​டுள்​ளது. ஆனால், இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் எதை​யும் கர்​நாடகா முறை​யாகச் செயல்​படுத்​த​வில்​லை’’ என்று சுட்​டிக்​காட்​டி​னார்.

மேலும், விகி​தாச்​சா​ரப்​படி முந்​தைய பற்​றாக்​குறை நீர் மற்​றும் ஆகஸ்ட் 31-க்​குள் தரவேண்​டிய நீர் என மொத்​தம் 36.635 டிஎம்சி நீரைத் தமிழ்​நாடு பெறு​வதை நீதி​மன்​றம் உறுதி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​னார்.

அப்​போது நீதிப​தி​கள் கூறும்​போது, ‘‘கர்​நாட​கா​வில் தற்​போது மழை நில​வரம் நன்​றாக இருப்​ப​தால், இந்த வழக்கை ஒரு வாரத்​துக்​குப் பின்​னர் விசா​ரிக்​கலாம்’’ என்று கருத்து தெரி​வித்​தனர்.
நீதிப​தி​கள், “வழக்கு விசா​ரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது. இந்த இடைப்​பட்ட காலத்​தில் கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்​துள்ள வி​னாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற உத்​தரவை கட்​டா​யம்​ கர்​நாடக அரசு பின்​பற்​ற வேண்​டும்’’ என்​று உத்​தரவிட்​டனர்​.

Read More
TVKஅரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

ஊழலற்ற தமிழகம் உருவாவதே முழு சுதந்திரம்: சுதந்திர தின உரையில் முதல்வர் விஜய் …..

முதல்​வர் பதவி​யேற்​றப் பிறகு கோட்​டையில் முதல்​வர் விஜய் முதல் முறையாகத் தேசி​யக் கொடியேற்றி உரை​யாற்​றி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: நம்மை அடிமை​யாக வைத்​திருக்​கிறார்​கள் என்று தெரிந்​தாலே மக்​கள் மத்​தி​யில் ஒரு ஒற்​றுமை ஏற்​படும்.

அனை​வரும் ஒரே மாதிரி சிந்​தித்து ஒன்று சேரு​வார்​கள். அவ்​வாறு ஒன்று சேரும் இடத்​தில்​தான் சாதி, மதம், மொழி, இனம் ஆகிய அனைத்​தும் உடைந்து நொறுங்​கும். அது​தான் உண்​மை​யான சுதந்​திரம். அப்​படி​தான் மகாத்மா காந்தி தலை​மை​யில் 1947-ல் இதே நாளில் நமக்கு சுதந்​திரம் கிடைத்​தது. அதைப் பின்​பற்றி படிப்​படி​யாக நாம் முன்​னேறி வரு​கிறோம்.

தற்​போது தமிழகத்தை லஞ்​சம், ஊழலில் இருந்து காப்​பாற்​று​வதே மிகப்​பெரிய ஒரு விடு​தலைக்​குச் சமமான விஷ​யம்​தான். அதை நோக்​கி​தான் நமது அரசும் செயல்​பட்டு வரு​கிறது. பொது வாழ்​வில் சமரசம் இருக்​கக் கூடாது.

மக்​கள் நலன்​தான் முக்​கிய​மானது. அந்த அடிப்​படை​யில்​தான் மக்​கள் நலன் சார்ந்த திட்​டங்​களில், மத்​திய அரசுடன் நிர்​வாக ரீதி​யாக ஒத்​துழைப்​புடன் இருக்​கிறோம். அதேவேளை​யில், மாநில உரிமை​களுக்​கும், தமிழகத்​துக்​கும் எதி​ரான கொள்கை முடிவு​களை தவெக அரசு கடுமை​யாக எதிர்க்​கும். அதில் மாற்​றுக் கருத்தே இல்​லை.
‘லஞ்​சம், ஊழலற்ற தமிழகத்தை உரு​வாக்​கு​வது​தான் முழு​மை​யான சுதந்​திரம்’’ என்று கோட்​டை​யில் தேசி​யக் கொடியேற்றி தனது சுதந்​திர தின உரை​யில் முதல்​வர் விஜய் உறு​தி​யாகத் தெரி​வித்​தார்.
தற்​போது தமிழகத்தை லஞ்​சம், ஊழலில் இருந்து காப்​பாற்​று​வதே மிகப்​பெரிய ஒரு விடு​தலைக்​குச் சமமான விஷ​யம்​தான். அதை நோக்​கி​தான் நமது அரசும் செயல்​பட்டு வரு​கிறது. பொது வாழ்​வில் சமரசம் இருக்​கக் கூடாது.

மக்​கள் நலன்​தான் முக்​கிய​மானது. அந்த அடிப்​படை​யில்​தான் மக்​கள் நலன் சார்ந்த திட்​டங்​களில், மத்​திய அரசுடன் நிர்​வாக ரீதி​யாக ஒத்​துழைப்​புடன் இருக்​கிறோம். அதேவேளை​யில், மாநில உரிமை​களுக்​கும், தமிழகத்​துக்​கும் எதி​ரான கொள்கை முடிவு​களை தவெக அரசு கடுமை​யாக எதிர்க்​கும். அதில் மாற்​றுக் கருத்தே இல்​லை.
பள்​ளி​களில் காலை உணவுத் திட்​டம் 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு விரிவுபடுத்​தப்​படு​கிறது. இதுத​விர ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் பல்​வேறு திட்​டங்​களைச் செயல்​படுத்தி உள்​ளோம். அதன்​படி விவ​சா​யிகளின் ரூ.5,932 கோடி பயிர்க்​கடன் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்​டத்​துக்கு ரூ.134 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு ஒரு கிராம் தங்​கம் வழங்​கும் தாய் மாமன் தங்க மோதிரத் திட்​டம் ரூ.755 கோடி​யில் தொடங்​கப்பட உள்​ளது.

லஞ்​சம் மற்​றும் ஊழலைத் தடுக்க பிரத்​யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வரு​வாய்த் துறை சான்​றிதழ்​கள் 15 நாட்​களுக்​குள் வழங்​கப்​படு​வதுடன், கோயில் நிலங்​கள் குறித்த விவரங்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளன.

சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் தியாகத்​தால் கிடைத்த சுதந்​திரம், சிலருக்​கான​தாக மட்​டும் இல்​லாமல் அனை​வருக்​கும் கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழகத்தை இந்​தி​யா​வின் முன்​மா​திரி மாநில​மாக​வும், 2036-ம் ஆண்​டுக்​குள் தமிழக பொருளா​தா​ரத்தை 1.5 டிரில்​லியன் டால​ராக​வும் உயர்த்த நாம் உறுதி ஏற்​போம். மக்​கள் அரசோடு இணைந்து நிற்க வேண்​டும். மக்​கள்​தான் ஆட்​சி​யாளர்​கள். நான் உட்பட இங்​குள்ள அனை​வரும் மக்​களின் சேவகர்​கள்​தான். அரசுக்கு எதி​ரான சதி​களை முறியடித்​து, நல்​லதை மட்​டுமே நோக்கி நகர்​வோம்.ஊழலைச் சிறிதும் சகித்​துக் கொள்​ளாத மனநிலையை நம் மக்​கள் கொண்​டிருக்க வேண்​டும், நமது மாநிலத்தை ஊழலற்​ற​தாக மாற்​று​வதற்கு அதி​காரி​கள், மக்​கள் அனை​வரும் துணை நிற்க வேண்​டும் இவ்​வாறு முதல்​வர் விஜய் பேசி​னார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

முதலமைச்சர் விஜய் கடிதம்-பிரதமர் நரேந்திர

மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலே நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள் மீது தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எட்டிய தென்னிந்திய மாநிலங்களுக்கு 1971 ஆம் ஆண்டிற்கு பிந்தைய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும் என்று முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு இடையேயான இடப்பகிர்வு முறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு.. தமிழ்நாடு அரசு 

00 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 67 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் தொழில் தொடங்கும் வகையிலும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ராக்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான ராக்கெட் தயாரிக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் ஆகிய 2 நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்யவுள்ளன. இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 143 கோடி ரூபாயில் டயர் உற்பத்தி ஆலையை அமைக்க ஜே.கே.டயர் நிறுவனமும், 300 கோடியில் HVAC கம்ப்ரசர் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஜெர்மனியின் BITZER நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் முதலமைச்சர்கள் மாநாடு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் 19, 20ஆம் தேதிகளில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு சென்னையில் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு தரப்பில் நடைபெறும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் தென்மண்டல முதலமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு கேரளாவில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் அமைச்சர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். இந்நிலையில் தற்போது சென்னையில் நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறாரா என்பது குறித்தான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் சூழலில், 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் நேரடியாக முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறாரா அல்லது அரசு தரப்பில் இருந்து அமைச்சர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்கிறார்களா என்பது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

கர்நாடக சட்டமன்றத்திற்கு செல்கிறார் cm விஜய்…

மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செல்வதை அம்மாநில முதலமைச்சர் டிகே சிவக்குமார் மீண்டும் உறுதிப்படுத்தினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Read More
அரசியல்குற்றம்தமிழ்நாடுவணிகம்

செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் -டாஸ்மாக் முறைகேடு வழக்கு-லஞ்ச ஒழிப்புத் துறை

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது

Read More