தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸின் அறிகுறிகள் என்ன?… இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவில் வேகமாக பரவி வரும் ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் எச்எம்பிவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த HMP வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல், தோல் தடிமன் போன்ற அறிகுறிகள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர் சுரேந்தர் கூறுகையில், “நார்மலாக காய்ச்சல், உடல்வலி, தொண்டையில் எரிச்சல் உணர்வு இருப்பது, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், HMPV வைரஸ் இருக்கிறதா என மருத்துவர்களிடம் சோதிப்பது நல்லது. எனினும், அனைவருக்கும் இந்த வைரஸ் சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
Read Moreவடகடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஅதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டாலும், அது தாங்கிக் கொள்ள வலிமை விசிகவிற்கு உண்டு” என தெரிவித்தார்.
Read Moreதிருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் மிக முக்கியமான விழாவாகும். இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் இன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக, கோயிலின் பின்புறம் உள்ள இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையில், இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கு தேவையான கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில், நேற்று கொட்டும் மழையிலும் அதனை மலைக்கு கொண்டு சென்றனர்சுமார் 6 அடி உயரம் கொண்ட இந்த கொப்பரை, 350 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளான இன்று கோயிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்த 7,500 பேரும் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீபத்தினை தரிசித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்..இந்நிலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுள் மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை தேர்ச்சி அடைவோருக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படவுள்ள மகா தீபத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read Moreகனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பிய நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் நேற்று 14 செ.மீ மழை பதிவானது. இதன்காரணமாக ஏரிக்கு நேற்று காலை 743 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தொடர்ந்து தற்போது விநாடிக்கு 6998 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று 21.50 அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை கடந்துள்ளது.24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடியை நீர்மட்டம் கடந்ததை அடுத்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக முதல் கட்டமாக ஐந்து கண் மதகிலிருந்து இரண்டு மற்றும் நான்கு ஆகிய செட்டர்களில் இருந்து ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வழுதலம்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.உபரி நீர் திறப்பதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டது.
பூண்டி ஏரி திறப்பு
இதற்கிடையே, சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் மற்றொரு ஏரியான பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தற்போது 12,760 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று 5000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டியில் மொத்த உயரம் 35 அடியில் 35 அடியும் நிரம்பி வழிகிறது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை கூடுதல் நீரை திறந்துவிட்டுள்ளனர். இதேபோல், புழல் ஏரியில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.சென்னையை சுற்றி மூன்று பகுதிகளிலும் உள்ள மிகப்பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் ஆறுகளில் நீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதே. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியுடன், பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் நீர் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்த 3 ஏரிகளிலும் நீர் திறக்கப்பட்டிருப்பதை உன்னிப்பாக கவனிக்கும் பணியில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Read Moreதென்கிழக்கு வங்கக்கடலில் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்குவதால், இன்று, 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது.
இன்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரமடையும்.
தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும்.
அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், இன்று மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில், பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
Read Moreபாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.
மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது. இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவாத், எல்.முருகன் மற்றும் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், 11.12.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
Read Moreகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Read More