Tamilnadu

Uncategorizedஅரசியல்தமிழ்நாடு

குடியரசு தலைவரை பயன்படுத்தி முட்டுக்கட்டை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குடியரசுத் தலைவர், ஆளுநர் மூலம் மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமன்ற அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை. மாநில பட்டியலில் உள்ள துறைகளை துச்சமென மதித்து மத்திய அரசே சட்டம் இயற்றுகிறது.

மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது. ராஜமன்னார் கமிட்டியை கலைஞர் அமைத்தபோது இருந்த சூழலை விட தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை..! ஏ.சி. ரயில் சேவை தொடக்கம்

இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பயன்படுத்தும் புறநகர் ரயில் சேவையாக சென்னை புறநகர் ரயில் சேவை இருக்கிறது. சுமார் 25 லட்சம் மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் புறநகர் ரயில் வழித்தடம் 1200 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்கள் உட்பட ஆந்திர பிரதேசம் வரை விரிவடைந்துள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் ரயில் சேவைகள் இயக்கப்படும் நிலையில், குளிர்சாதன ரயில் சேவையும் விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட நிலையில் இன்று சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை குளிர்சாதன ரயில் சேவை புறநகர் ரயில் வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள், மெட்ரோ ரயிலில் இருப்பது போன்று ரயில் நிலையங்களுக்கான தகவல் அமைப்பு, சிறப்பான உட்கட்டமைப்பு போன்ற வசதிகள் உள்ளது.

முதல் கட்டமாக இரண்டு குளிர்சாதன ரயில்கள் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரையிலும் 6 சேவைகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் குளிர்சாதன ரயில் காலை 8:35க்கு செங்கல்பட்டு சென்றடையும். அதே ரயில் காலை 9 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு 10:35க்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

மாலை 3:45க்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5:25க்கு செங்கல்பட்டு சென்றடையும். அதே ரயில் மாலை 5:45 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு இரவு 7:15க்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7:35க்கு புறப்படும் ரயில் தாம்பரத்திற்கு இரவு 8:30க்கு சென்றடையும். அதேபோன்று அதிகாலையில் தாம்பரத்திலிருந்து 5:45 புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை 6:45க்கு வந்தடையும்.
ஞாயிற்றுக்கிழமை குளிர்சாதன ரயில் இயக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் ரயில் நின்று செல்லும் என அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச பயண கட்டணமாக 35 ரூபாயும் அதிகபட்சமாக 105 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இனி தமிழில் மட்டுமே அரசாணை.. அரசு அதிகாரிகள் தமிழில் கையெழுத்து – தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும். அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும். அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

ராஜ்ய சபா எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்..ம.நீ.ம துணைத் தலைவர் தங்கவேல்

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. திமுக சார்பில் எம்.பி. ஆக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலமும், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் சார்பில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக கூட்டணி சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் ஒருவரும் உறுதியாக எம்.பி.யாக முடியும். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் மாநில துணைத்தலைவர் தங்கவேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இதுவரை நாங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ராஜ்ய சபா எம்பியாக நிறுத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம். தலைவர் தான் நிற்க வேண்டும் என ஆசைப்பட்டு அவரிடம் கூறி உள்ளோம். அவரும் சரி என கூறியிருக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
20, 21 தேதிகளில் வந்துவிடுவார், வந்ததும் முடிவு செய்துவிடுவோம். திமுக உடன் தான் கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சியில் இருந்து தலைவர்கள் சிலர்தான் சென்றுள்ளார்கள். ஆனால் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைஇன்று கூடுகிறது-மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வருகிறார் முதல்வர்

5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மாநிலத்துக்கு அதிகஅதிகாரம் வழங்கும் வகையிலான இந்த தீர்மானத்தை, உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதிமுக-பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்துள்ள நிலையிலும், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வுசெய்யப்பட்ட நிலையிலும் இன்றைய கூட்டம் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை புதிய தலைமையுடன் பாஜக எதிர்நோக்கும் நிலையில் அமித் ஷாவின் தேர்தல் கணக்கு என்னவாக இருக்கும்?.
அடுத்த ஓராண்டில் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி தேர்தல் வியூகம் வகுக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின் இடையே துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா சுமார் ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மனு அளித்ததாகக் கூறினார். அதேநேரம் ஒரு ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அமித் ஷா அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
சென்னை வரும் அமித்ஷாவை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சென்று சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பா.ஜ.க மாநில தலைவர் பதவி? நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முடித்துக் கொண்டு வெளியேறியது. அப்போது கூட்டணி முறிவுக்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அப்போதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் விரிசல் ஏற்பட்டது. அதையடுத்து பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் 2026 தேர்தலை குறிவைத்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கி இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை எம்எல்ஏ நாகேந்திரன் டெல்லி தலைமை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்ந்தெடுத்தால் எல்லாம் சுலபமாக முடியும் என பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் நயினார் நாகேந்திரன் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர் காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் காத்திருந்த நயினார் நாகேந்திரன் விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பாஜகவின் மாநில தலைவர் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழக பாஜக மாநில தலைவர் யார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு – ஸ்டாலின்

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு – ஸ்டாலின்
கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தத் தீர்வாக அமையும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

யூடியூப் சேனல் தொடங்குவது குறித்து பயிற்சி அளிக்கும் தமிழக அரசு; 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் யூடியூப் சேனல் உருவாக்குதல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

“சென்னையில் சொந்தமாக யூடியூப் (YouTube) சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது 22.04.2025 முதல் 24.04.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – டொமைன் பெயர் & ஹோஸ்டிங் – இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. தொலைபேசி எண்: 9360221280 / 9543773337. முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

TASMAC | அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு : நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காரணங்கள் எதையும் குறிப்பிடாத நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து இருவரும் விலகுவதாக அறிவித்தனர். மேலும், இந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதிக்கும் பரிந்துரைத்தனர்.

Read More