Tamilnadu

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று கனமழை – வானிலை மையம் 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் இன்று (19.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (20.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அடுத்த 2 மணி நேரத்தில்…” – சென்னைக்கு மழை எச்சரிக்கை கொடுத்த தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

Read More
குற்றம்தமிழ்நாடு

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? – ஐகோர்ட் கேள்வி

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? – ஐகோர்ட் கேள்விதமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் கழிவறைகளில் கைதிகள் மட்டும் ஏன் தொடர்ச்சியாக வழுக்கி விழுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கல், கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அவரது தந்தை இப்ராஹிம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஜாகிர் உசேனின் இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 15) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜி.ஆர் .சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர், மதியம் 12 மணிக்கு தண்டனை விவரத்தை நீதிபதி நந்தினிதேவி வாசித்தார். அதில், 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடாக ரூ.85 லட்சம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்தார். இத்துடன் தண்டனை விதிக்கப் பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதமாக விதித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் திரண்டிருந்த மாதர் சங்கத்தினர் தீர்ப்பை வரவேற்று அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, 9 குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பிறழ் சாட்சி அளிக்கவில்லை: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், ஒருவர்கூட பிறழ் சாட்சி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, லேப்டாப், செல்போன், மெமரிகார்டு என எலெக்ட்ரானிக்ஸ் ஆதாரங்கள் மற்றும் 1,500 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட தனி அறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2023 பிப். 24 முதல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை 2 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “சிபிஐ விசாரணைக்கு நான் உத்தரவிட்டதால்தான் இன்று நீதி கிடைத்திருக்கிறது” என்று
பதில் அளித்துள்ளார்.

யாருக்கு எத்தனை வருடம் தண்டனை: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் குற்றவாளியான (ஏ1) சபரிராஜனுக்கு 4 ஆயுள், திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள், சதீஷூக்கு 3 ஆயுள், வசந்தகுமாருக்கு 2 ஆயுள், மணிவண்ணனுக்கு 5 ஆயுள், பாபுக்கு 1 ஆயுள், ஹேரேன்பாலுக்கு 3 ஆயுள், அருளானந்தம் மற்றும் ஏ9 அருண்குமார் ஆகியோருக்கு தலா 1 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகள் தயார்-அடுத்த மாதம் முதல் சேவை தொடங்கும்…

ஜூன் மாதம் முதல் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள 5 பணிமனைகளில் ஒன்றான பெரும்பாக்கத்தில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்.டி.சி) பணிமனைக்கு புதிய மின்சாரப் பேருந்துகள் வரத் தொடங்கியுள்ளன.

625 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்தல், வழங்குதல், இயக்குதல், பராமரித்தல் ஆகியவற்றை மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contracting – GCC) அடிப்படையில் அசோக் லேலண்டின் துணை நிறுவனமான OHM Global Mobility Pvt Ltd-க்கு எம்.டி.சி வழங்கியுள்ளது. உலக வங்கி ஆதரவுடன் சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் இந்த மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

மின்சாரப் பேருந்துகள் விநியோகம் தொடங்கப்பட்டுவிட்டதாக எம்.டி.சி-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “மின்சாரப் பேருந்து இயக்கம் படிப்படியாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, 625 மின்சார பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும்,” என்று அவர் கூறினார். 625 மின்சாரப் பேருந்துகளில், 400 ஏசி அல்லாத பேருந்துகளாகவும், 225 ஏசி பேருந்துகளாகவும் இருக்கும். வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணிமனைகளில் இருந்து இந்த மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

முதலில் வியாசர்பாடி பணிமனை மூலம் ஏசி அல்லாத பேருந்துகளும், பெரும்பாக்கம் பணிமனை மூலம் ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகள் என இரண்டும் இயக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். மின்சாரப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது உட்பட, 5 பணிமனைகளிலும் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினார். இந்த மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் மின்சாரப் பேருந்து சேவையைத் தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டமாக, 400 ஏசி பேருந்துகள் உட்பட 600 மின்சார தாழ்தள பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த (GCC) அடிப்படையில் கொள்முதல் செய்ய எம்.டி.சி டெண்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதனை அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. 23 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
நீட் தேர்வை இன்று நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியரும் எழுதவுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 41 மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
பிற்பகல், 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை விதித்துள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என்றும், மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவைகளை அணியக்கூடாது என்றும், ஆண் தேர்வர்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது எனவும், பெண் தேர்வர்கள் துப்பட்டா அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அலைபேசி, ஹெட்போன், இயர்போன், பேனா, கால்குலேட்டர், பெல்ட், உணவு, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை எனவும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்.. 9000 இடங்களில் கேம்ப்.. மீண்டும் விண்ணப்பிக்க…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்.. 9000 இடங்களில் கேம்ப்.. இவர்களெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்கணும்!

இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவலி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பதில் கொள்ளையா? புதிய நடைமுறைக்கு மாறும் மாநகராட்சி

கட்டணம் வசூலிப்பது தவறு இதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று அண்மையில் செய்தியும் வெளியிட்டது. அந்த செய்தியில் சட்டவிரோதமாக பைக் மற்றும் கார் மற்றும் பெரிய வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இந்த விவாகரத்தில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பி இருந்தது. பல்வேறு சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி ஒப்பந்தம் முடிந்த பின்னர் டெக்ஸோ கட்டணம் வசூலிப்பது தவறு என்றும் முறைகேட்டிற்கே வழிவகுக்கும் என்றும் புகார்கள் கூறினார்கள். வாய்மொழி அனுமதி இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், குறிப்பிட்ட செய்தி நிறுவனத்திடம், டெக்ஸோவின் ஒப்பந்தம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரிலேயே காலாவதியாகி விட்டதாக கூறியிருக்கிறார். எனினும் டிசம்பர் வரை மாநகராட்சிக்கு 1.75 கோடி வருவாய் கிடைத்தால், தொடர்ந்து கட்டணம் வசூலிக்க வாய்மொழி உத்தரவு வழங்கினாராம். டெக்ஸோ ஒரு அரசு நிறுவனம் என்றும், ஒப்பந்தம் இறுதியாகும் வரை வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாகவும் ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார். சில இடங்களில் தங்கள் ஊழியர்கள் அதிக விலைக்கு சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்தது தொடர்பாக சென்னை மாநகராட்சி தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திடம் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.

மாநகராட்சி மீது புகார் இதனிடையே முறையான டெண்டர்கள் இல்லாமல் இதுபோன்ற பணிகளை அனுமதிப்பது சட்டவிரோத செயல்களை சாதாரண விஷயமாகி விடும் என்றும், சட்டவிரோதமாக பணம் வசூலித்த நபர்கள் மீது மாநகராட்சி போலீஸ் புகார்களை பதிவு செய்ய வேண்டும். டெக்ஸ்கோ மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. வாகன நிறுத்தம் இடங்கள் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், “சென்னையில் மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு, ஜார்ஜ் டவுன் ரட்டன் பஜார், அண்ணாநகர், என்.எஸ்.சி. போஸ் ரோடு, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடு, புரசைவாக்கம், தியாகராய நகர் ஜி.என்.செட்டி ரோடு, மயிலாப்பூர் தெப்பக்குளம், சேத்துப்பட்டு நிக்கலஸ் ரோடு ஆகிய இடங்களில் வாகன நிறுத்த கட்டணம் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக (டெக்ஸ்கோ) நிறுவன பணியாளர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு
காருக்கு 20 ரூபாய் ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5-ம், கார்களுக்கு ரூ.20-ம், பஸ் மற்றும் வேன்களுக்கு ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கையடக்க கருவி மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக வாகன நிறுத்தக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு கட்டணத் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வாகன பதிவு எண் கட்டாயம் இந்தநிலையில் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்படும் பணியை ஒழுங்குமுறைப்படுத்த மென்பொருளில் பல்வேறு திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதன்படி, வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ரசீதில் வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்வது கட்டாயம். கியூ-ஆர் குறியீடு மூலமாக ரசீதின் உண்மைத் தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்படும். பணப் பரிவர்த்தனை மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய முறையினை கையடக்க கருவியிலிருந்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை கட்டாயம் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யும் பணியாளர்கள் கட்டணம் வசூலிக்கும் போது உரிய அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மற்றும் டெக்ஸ்கோ சின்னம் பொறிக்கப்பட்ட மேலங்கி அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் வாகன நிறுத்த கட்டணம் செலுத்தும் போது பணத்துக்கு பதிலாக டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்த கட்டணம் வசூல் தொடர்பாக 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா..! மீண்டும் அமைச்சரான மனோ தங்கராஜ் – தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மே 6 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது விமர்சனம் எழுந்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. பொன்முடியின் பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் கண்டனம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கண்டனக்குரல்கள் ஒலித்தன.
ஜாமினா, அமைச்சர் பதவியா என உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல, பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய புகாரில் பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோயுள்ளது.
இதனால் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது. இதேபோல, சட்டவிரோத பணமோசடி வழக்கில் ஜாமீனில் உள்ள செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என, இன்றைக்குள் (28.04.2025) தெரிவிக்குமாறு கூறியிருந்தது.
இதன்படி, பொன்முடியும், செந்தில் பாலாஜியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள் என்றும் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்றும், மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் நியூஸ்18 தமிழ்நாடு முன்கூட்டியே செய்தி வெளியிட்டது.
அதன்படி இருவரும் அளித்த ராஜினாமாக்களை, முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமாவை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கரிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிவசங்கரிடம் போக்குவரத்துத்துறை உள்ள நிலையில், மின்சாரத்துறையையும் இனி அவரே கவனிப்பார். இதே போல், வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம், செந்தில்பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் பதவி வகித்து வந்த ராஜகண்ணப்பன், பொன்முடி வசம் இருந்த வனத்துறை மற்றும் காதித்துறைகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபுரம் தொகுதியிலிருந்து எம்எல்ஏ-வாக தேர்வானவர். கடந்த முறை அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சற்றே வலுவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு, மனோ தங்கராஜுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் அவர் ஏற்கெனவே வகித்த பால்வளத்துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்கிறார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

ஏப்.25-ல் உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு… 

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை உறுதி செய்யும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் செய்வதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்த உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டது. மேலும், துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசின் அதிகாரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த சூழலில், கடந்த 17ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.இந்நிலையில், கடந்த ஆண்டைப் போன்று தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை வரும் 25ஆம் தேதி உதகை ராஜ்பவனில் நடத்த உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்கும்படி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

Read More