Tamilnadu

Covid19இந்தியாதமிழ்நாடு

தமிழ்நாட்டில் 27 பேர்..! இந்தியா முழுக்க 511 பேர்..! கொரோனா தொற்று பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,170 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. 7 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பாமக தலைவராக அன்புமணி… இளைஞர் சங்க தலைவராக சவுமியா!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.
45 ஆண்டுகள் இந்த கட்சியை கடமை, கன்னியம், கட்டுப்பாடோடு நடத்தி வந்தேன் அதற்கு அன்புமணி கலங்கம் ஏற்படுத்திவிட்டார் என ராமதாஸ் கருத்து.
நான் தான். அன்புமணியை 35 வயதில் என் சத்தியத்தியத்தையும் மீறி மத்திய அமைச்சராக நான் தான் தவறு செய்துவிட்டேன்.
இந்த நிலையில் நேற்றே அன்புமணி ராமதாஸ் , இன்று முதல் நிர்வாகிகளை தனது அலுவலகத்தில் சந்திக்கிறார் என்ற அறிவிப்பும் வந்தது
பாமக பொதுக்​குழு​வில், தனது மகள் வழி பேரனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​த​தில் வெளிப்​படை​யாக வெடித்த அப்பா – பிள்​ளைக்​கான அதி​கார யுத்​தம் இருக்க இருக்க உக்​ர​மாகிக் கொண்டே தான் போகிறது. இந்த நிலை​யில், தனது அதி​காரத்தை நிலைநிறுத்​திக் காட்ட பாமக மற்​றும் வன்​னியர் சங்க நிர்​வாகி​களை அழைத்து ராம​தாஸ் நடத்​திய ஐந்து ஆலோ​சனைக் கூட்​டங்​களும் பிசுபிசுத்​துப் போய்​விட்​டன. கட்​சிக்​குள் இனி அன்​புமணி தான் எல்​லாமே என தெளி​வாக தெரிந்து போன​தால் பெரு​வாரி​யான நிர்​வாகி​கள் தோட்டத்து ஆலோ​சனைக் கூட்​டங்​களை தைரிய​மாகப் புறக்​கணித்து விட்​டனர். இதில் 3 எம்​எல்​ஏ-க்​களும் உள்​ளடக்​கம்.

தனது ஆலோ​சனை கூட்​டத்​துக்கு வரா​மல் புறக்​கணிப்​பவர்​களை தயவு பார்க்​காமல் பொறுப்​பிலிருந்து நீக்​கும் முடி​வில் தான் ராம​தாஸ் முதலில் இருந்​தா​ராம். ஆனால், சுமார் 80 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் புறக்​கணித்​த​தால், கட்சி நலன் கருதி யாரை​யும் கைவைக்க முடி​யாமல் பொறுமை காக்​கி​றா​ராம் மருத்​து​வர். அதேசம​யம், வெளிப்​படை​யாகப் பார்த்​தால் இது அதி​காரப் போட்​டி​யாக தெரிந்​தா​லும் உள்​ளுக்​குள் வேறு பல கணக்​கு​களும் ஓடிக்​கொண்​டிருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.
இது தொடர்​பாக பாமக வட்​டாரத்​தில் நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “கட்​சிக்​கான வரவு செல​வு​கள், அறக்​கட்​டளை சொத்து உள்​ளிட்ட அனைத்​தை​யும் இப்​போது மருத்​து​வர் அய்யா தான் கவனித்து வரு​கி​றார். பாமக தலை​வ​ராக ஜி.கே.மணி இருந்த வரை இதில் எந்​தச் சிக்​கலும் ஏற்​பட​வில்​லை. பாமக தலை​வ​ராக அன்​புமணியை அறி​வித்த பிறகு தான் சிக்​கல் ஆரம்​ப​மானது. முன்​பு, ஒன்​மேன் ஆர்​மி​யாக அனைத்து முடிவு​களை​யும் தானே எடுத்து வந்த அய்​யா​வுக்​கு, மகன் தலை​வ​ராக வந்த பிறகு அப்​படி சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை.
அய்யா எந்த முடிவை எடுத்​தா​லும் ஏன், எதற்கு என்ற கேள்வி அன்​புமணி தரப்​பிலிருந்து வந்து விழுந்​தது. இது பல நேரங்​களில் அய்​யா​வுக்கு பெருத்த சங்​கடங்​களை உண்​டாக்​கியது. இதனிடையே, மரு​மகள் சவுமியா அன்​புமணி​யும் கட்சி நடவடிக்​கை​களில் தலை​யிட ஆரம்​பித்​தார். இதை அய்யா சுத்​த​மாக விரும்​ப​வில்​லை. சவுமியா சொல்​லித்​தான் அன்​புமணி, பல விஷயங்களிலும் கேள்விகளை எழுப்புகி​றார் என்​பது அய்​யா​வின் புரிதல்.

இந்த நிலை​யில் தான் அய்​யா​வின் விருப்​பத்​துக்கு மாறாக 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக-வுடன் கூட்​டணி அமைத்​தார் அன்​புமணி. இதன் பின்​னணி​யில், தானோ, சவுமி​யாவோ மத்​திய அமைச்​சர் ஆகி​விட வேண்​டும் என்ற திட்​டம் அன்​புமணிக்கு பிர​தான​மாக இருந்​தது. ஆனால், எதிர்​பார்த்​தது எது​வும் நடக்​காது போன​தால், ‘இனி​யா​வது நான் சொல்​வதைக் கேளுங்​கள்’ என்று சொல்​லிப்​பார்த்​தார் அய்​யா. ஆனால், அவர் சொல் எடு​பட​வில்​லை. தேர்​தல் சமயத்​தில் நடந்த வரவு செலவு​கள் குறித்​தும் ‘கணக்கு வழக்​கு’ சர்ச்சை வெடித்​திருக்​கிறது. இதையெல்​லாம் பார்த்​து​விட்​டுத் தான் மகள் வழி பேரன் முகுந்​தனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக திடீரென அறி​வித்​தார் அய்​யா. இதற்கு அன்​புமணி பொது மேடை​யிலேயே எதிர்ப்​புக் கொடி தூக்​கி​னார்.

இந்த நிலையில், அதனால் மக்​கள​வைத் தேர்​தலைப் போல கூட்​டணி விஷ​யத்​தில் அன்​புமணி அவசரப்​பட்​டு​விடக்கூடாது என்​ப​தற்​காக, அதி​முக கூட்​ட​ணியை இறு​தி​செய்ய அமித் ஷா சென்​னைக்கு வந்த நாளில் அன்புமணியை பாமக செயல்​தலை​வராக்​கி, தலை​வர் பொறுப்பை தானே எடுத்​துக் கொண்​டார் அய்​யா. இதை​யும் அன்​புமணி துளி​யும் எதிர்​பார்க்​க​வில்​லை. அய்​யா​வின் இந்த நடவடிக்​கைக்​குப் பிறகு, அன்​புமணி​யும் தனது ஆதர​வாளர்​களை தக்​கவைக்​கும் வேலை​களில் தீவிர​மாக இறங்​கி, அதில் வெற்​றி​யும் கண்​டு​விட்​டார்.

பாமக மற்​றும் வன்​னியர் சங்க நிர்​வாகி​களில் பெரும்​பகு​தி​யினர் அன்​புமணி பக்​கமே நிற்​ப​தால் அய்​யா​வால் அடுத்​த கட்​டத்​துக்​குப் போக​முடிய​வில்​லை. இதனால் நாளுக்கு நாள் அன்​புமணி​யின் கை ஓங்​கிக் கொண்டே வரு​கிறது. இரு​வ​ருக்​கும் இடை​யில் ஜி.கே.மணி​தான் இப்​போது சமா​தான தூது சென்​றபடி இருக்​கி​றார். ஆனால், தூதராக ஜி.கே.மணி வரு​வதையே அன்​புமணி அவ்​வள​வாய் விரும்​பவில்லை என்​கி​றார்​கள். கட்​சிக்​குள் தனது செல்​வாக்​கைக் காட்ட அய்யா அதிரடி நடவடிக்​கை​களை எடுத்​தார். ஆனால், நடப்​பதை எல்​லாம் பார்த்​தால் அது அவரையே பூம​ராங் கணக்​காய் தாக்​கி​விடும் போலிருக்​கிறது” என்​றார்​கள்.

இதனிடையே, மீண்​டும் அன்​புமணியை கட்​சித் தலை​வ​ராக்​கு​வது, இளைஞர் சங்க தலை​வ​ராக சவுமி​யாவை நியமிப்​பது, வன்​னியர் சங்க தலை​வர் பொறுப்பை முகுந்​தனுக்கு தரு​வது என ஒரு சமா​தான உடன்​படிக்கை தைலாபுரம் தோட்​டத்​தில் பேசப்​பட்டு வரு​வ​தாக சொல்​லப்​படு​கிறது. இதற்கு மத்​தி​யில், “எனக்​கும் அன்​புமணிக்​கும் மனக்​கசப்பு இல்​லை. கசப்பு என்று எப்​போதும் நான் கூறியதும் இல்​லை; இனிப்​பான செய்​தி​யை​தான் கூறி வரு​கிறேன்.

இது தொடர்​பாக அடுத்த வியாழக்​கிழமை (மே 29-ம் தேதி) பேசலாம்” என செய்​தி​யாளர்​களுக்கு சேதி சொல்லி இருக்​கி​றார் ராமதாஸ். அதே​போல். தரு​மபுரி மாவட்​டம் கடத்​தூரில் 24-ம் தேதி நடை​பெற்ற கூட்​டத்​தில் பேசிய அன்​புமணி, “அப்​படி நான் என்ன தவறு செய்​தேன்? ஒரு மாத கால​மாக மன உளைச்​சலில் இருக்​கிறேன். எனக்கு தூக்​கமே வரவில்​லை” என குமுறி இருக்​கி​றார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 பிரிவுகள் என்னென்ன? முழு விவரம்…

தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மறுநாளே மாணவி அளித்த புகாரின்படி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஞானசேகரன் மற்றும் 29 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஞானசேகரன் மீது பதியப்பட்ட 11 புகாரிலும், அவர் குற்றவாளி என நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். மேலும் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் விவரம்:
1. 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்
2. 126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.
3. 87 – மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.
4. 127(2) – மாணவியை உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.
5. 75(2) – மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.
6. 76 – மாணவியை கடுமையாக தாக்குதல்
7. 44 மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.
8. 351(3) மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.
9. 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.
தகவல் தொழில்நுட்ப சட்டம்:
10. 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்
11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 4.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் புரிந்துள்ளார் என்றும் இது அரிதிலும் அரிதான வழக்கு என்றும் தெரிவித்தது. எனவே ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, ஞானசேகரனை குற்றவாளி என மீண்டும் தெரிவித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து ஞானசேகரன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Read More
குற்றம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு.. இன்று தீர்ப்பு – ஞானசேகரனுக்கு என்ன தண்டனை..

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றது. இந்த கல்லூரிக்கு உள்மாநிலம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேசி பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் மாணவனை மிரட்டி அனுப்பி உள்ளனர். பின்னர் மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அடையாற்றை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நிதிமன்ற உத்தரவின்படி, மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு:
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு ஆள்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை தீவிரப்படுத்தினர். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான அதிமுக வலியுறுத்தி வந்தது.

ஆனால் தமிழக அரசு சி.பி,ஐ விசாரணை தேவை இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.இதனையடுத்து மீண்டும் ஒரு பெண் அளித்த புகாரில் ஞாசேகரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற காவலில் உள்ள ஞான சேகரனை சி.பி.ஐ அதிகாரிகள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்று தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம்
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கியது.அப்போது தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லாதவை என்றும் ஞானசேகரன் தரப்பில் முறையிடப்பட்டு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து சென்னை அள்ளிகுளம் வளாகத்தில் உள்ளா உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது.இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது.

ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?
அரசு தரப்பில் 29 சாட்சியங்களும் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.அதில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றங்கள் அனைத்தும் நிருப்பிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஞானசேகரனுக்கு எதிரான அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள் உள்ளதாக கூறியதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ததை எடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் மே 28 ஆம் தேதி வழங்கப்படும் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுத தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. அதே போல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

NSE-ல் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள்… 4 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்- அடுத்த 3 நகரங்கள்

சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வை மணி அடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், தேசிய பங்குச் சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் மூலம் கடனுக்கான வட்டி செலுத்துவது குறையும். இன்றியமையாத உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டப்படும். சென்னை மாநகராட்சியின் பொருளாதார நிலை மேம்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்களை சப்ஸ்கிரைப் செய்வதில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். 4.21 மடங்கு அளவிற்கு அதிகமாக சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்துள்ளது. கிட்டதட்ட 421 கோடி ரூபாய் என்று சொல்லலாம்.
இந்த நிதிப் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு ஆண்டு வட்டியாக 7.97 சதவீதம் கிடைக்கும். இது வங்கிகளில் ஃபிக்சிட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சப்ஸ்கிரிப்ஷன் தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் ரிஷப் ஐஏஎஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், இது முதல்முறை அரங்கேறியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது.
நான்கு மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்
இதுபோன்ற நிதிப் பத்திரங்களை எதிர்காலத்திலும் வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பத்திரங்களை 4 மடங்கிற்கும் மேல் சப்ஸ்கிரைப் செய்திருப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. அடுத்தகட்டமாக கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளும் தேசிய பங்குச் சந்தையில் நிதிப் பத்திரங்களை வெளியிடும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் நிதிப் பத்திரங்கள் வெளியிடவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

ராஜ்ய சபா எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு:தமிழகத்தில் புதிதாக வாய்ப்பு பெறும் 6 பேர் யார்?

6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகின்ற ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.-வின் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், அ.தி.மு.க-வின் என். சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அ.தி.மு.க.வில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்த முறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எம்.பி.யாகும் கமல்ஹாசன்:

தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? அதிமுக சார்பில் தே.மு.தி.கவுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படுமா? அன்புமணி மீண்டும் போட்டியிடுவாரா? என்பது விரைவில் தெரியவரும். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து யார் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

அடையாறு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: அனகாபுத்தூரில் 200 குடும்பங்கள் வெளியேற்றம்

சென்னையில் அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அனகாபுத்தூரில் 200 குடும்பங்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாதக்கணக்கில் தேக்கமடைந்தும், தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீர்வளத் துறை (WRD), சென்னை மாநகராட்சி, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய அரசு அமைப்புகள், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
பல குடியிருப்பாளர்களை ஒத்துழைக்கச் செய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அனகாபுத்தூர் பகுதியில் மொத்தம் 400 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. இப்பணியின் முந்தைய கட்டங்களில் தோபிகானா பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குவைத்-இ-மில்லத் நகரில் இருந்து ஏற்கனவே 200 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது எஞ்சியுள்ள 200 குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று (மே 25) மாலை நிலவரப்படி, 116 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பருவமழை தொடங்குவதற்குள் இப்பணி நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், அடையாறு பாலம் அருகே உள்ள மல்லிப்பூ நகர் அடுத்த பெரிய சவாலாக இருக்கும் என்றும், அங்கு 1,200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பரந்த சுற்றுச்சூழல் மற்றும் வெள்ளத் தடுப்பு இலக்குகளுடன் ஒத்துப்போனாலும், அவ்வப்போது பதற்றமான சூழ்நிலைகள் நிலவிய வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் ஒரு குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கும், அரசு வழங்கிய மாற்று இடங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இத்தகைய எதிர்ப்புகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதியளிப்புகள் மூலம் சமாளிக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி சென்னையின் நதி சீரமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில், அடையாறு ஆற்றின் கரைகளை மீட்டெடுத்து புனரமைப்பதன் மூலம், நகரத்தின் வெள்ள பாதிப்பை குறைக்கவும், நிலையான நகர்ப்புற வாழ்விடத்தை மேம்படுத்தவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Read More
அரசியல்நிகழ்ச்சிகள்

உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் முடியும் முன்பே, சிலர் உயிரிழந்துவிட்டதாகவும், சிலர் ராஜினாமாவும் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காலி பணியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உள்ளாட்சி நிர்வாகம் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்கள் இல்லை என்றும் சில இடங்களில் இடஒதுக்கீட்டை இறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு, வாக்காளர்களின் புகைப்படங்களுடன் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீட்டை செய்து தேர்தல் நடத்தவேண்டும் என்றும் அதற்கு முன்பு தேர்தல் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
காலி பணியிடங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன், புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Read More
Covid19தமிழ்நாடு

மீண்டும் பரவி வரும் கொரோனா..! தமிழகத்தில் 66 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மொத்தமாக 257 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கேரளாவில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும், மகாராஷ்டிராவில் 56 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டில் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரசின் திரிபான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில், ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்காது என்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் JN.1 என்ற வைரசின் இரண்டு திரிபுகள் பரவி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LF.7 மற்றும் NB.1.8 என்ற இரண்டு திரிபுகள் பரவி வரும் நிலையில் ஏற்கனவே செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசிகள் மூலம் இந்த வைரஸ்களை அழிப்பது சாத்தியமற்றது என பலகட்ட ஆய்வுகளின் முடிவில் தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
XBB.1.5 monovalent வகை பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் புதிய வகை வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் பைசர், பயோண்டெக், மாடர்னா ஸ்பைக்வேக்ஸ், நோவாவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
RASI PALANஆன்மீகம்தமிழ்நாடு

மே 19 முதல் 31 வரை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான இருவார ராசிபலன் 

மேஷம்: நல்லவை நடக்கத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். உங்கள் திறமை பலரால் பாராட்டப்படும். வீட்டில் விசேஷங்கள் அணிவகுத்து வரும். தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். பூமியால் ஆதாயம் உண்டு. வர்த்தகத்தில் பழைய பாக்கிகள் திடீரென்று வசூலாகும். அரசுத் துறையினருக்கு ஏற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். அரசியல் சார்ந்தோர்க்கு புகழ், பாராட்டு கிட்டும். மேலிடத்தின் ஆதரவு கூடும். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். பயணப்பாதையில் வேகம் வேண்டவே வேண்டாம். தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். சுப்ரமண்யர் வழிபாடு சுபிட்சம் சேர்க்கும்.

ரிஷபம்: மனதில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். திறமைக்கு ஏற்ற வகையில் அலுவலகத்தில் அந்தஸ்து உயரும். யாரிடமும் வீண் ரோஷம் வேண்டாம். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாரிசுகளின் திருமணத் தடை நீங்கும். பூர்வீக சொத்து சேரும். பெற்றோர் உடல்நலம் சீராகும். ஆபரணங்களை இரவல்தர, பெற வேண்டாம். தொழில், வாணிபத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் அவசியம். அரசுத் துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு நிதானம் முக்கியம். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். ரத்த அழுத்தம், அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். ஈசன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

மிதுனம்: சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுபிட்சங்கள் வந்து சேரும். பணியிடத்தில் சுமுகப் போக்கு நிலவும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரம் தவறாது செய்யுங்கள். இல்லத்தில் இன்சொல் பேசுங்கள். சுபகாரியங்களின் வீண் கேளிக்கை தவிருங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தங்கள் பத்திரம். அரசுப் பணியில் உள்ளோர் கவனமாகச் செயல்படுவது நல்லது. அரசியல் சார்ந்தவர்களுக்கு பேச்சில் நிதானம் அவசியம். படைப்பு,கலைத்துறையினர் ரகசியங்களைப் பரமரகசியமாக வையுங்கள். ரத்த நாளம், அலர்ஜி, சுவாசம், ஜீரண உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

கடகம்: திறமைகள் பளிச்சிடத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரத்தொடங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வீட்டில் விசேஷங்கள் வரும். ரத்தபந்தங்களால் ஆதரவு கிட்டும். அசையும் அசையா சொத்து சேரும். வழக்குகளில் நிதானம் அவசியம். செய்யும் தொழிலில் முயற்சி முக்கியம். ஒப்பந்தங்களில் கவனித்துக் கையெழுத்திடுங்கள். அரசுத் துறையினர் அமைதியாகச் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பழுதுபட்ட வாகனத்தை உடன் சீரமையுங்கள். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்

சிம்மம்: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் வீண் தர்க்கம் யாரிடமும் வேண்டாம். பொறுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இல்லத்தில் இன்சொல் அவசியம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். வீடு, வாகனம் மாற்ற வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி வரத்தொடங்கும். பழைய கடன்கள் பைசலாகும். அரசுத் துறையினர்க்கு ஏற்றம் உறுதியாகும்.அரசியல் சார்ந்தோர், மேலிடத்தின் பேச்சைக் கேட்டு நடப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரும். பயணப்பாதையில் கவனச் சிதறல் தவிருங்கள். அடிவயிறு,கொழுப்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு, பிரகாசிக்கச் செய்யும்.

கன்னி: திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அலட்சியமும் அவசரமும் வேண்டாம். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்காதீர்கள். வீட்டில் விட்டுக் கொடுத்தால் விசேஷங்கள் வரும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பழைய கடன்களில் அலட்சியம் கூடாது. பத்திரங்கள் எதையும் பத்திரமாக வையுங்கள். வர்த்தகத்தில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி உண்டு. அரசுப் பணிபுரிவோர், கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள். அரசியல் சார்ந்தோர் பிறர் சொல் கேட்டால் பெரும்பழி வரலாம், யோசித்து செயல்படுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். மறைமுக உறுப்பு, முதுகு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

துலாம்: எண்ணம்போல் ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் தடைபட்ட உயர்வுகள் தடை நீங்கி வந்து சேரும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வீடு, வாகன யோகம் உண்டு. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசுப் பணியிலுள்ளோர்க்கு இஷ்டம்போல இடமாற்றம் கிட்டும். அரசியல் துறையினர்க்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். திடீர் பதவிக்கு வாய்ப்பு உண்டு. கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். பயணப் பாதையில் போதுமான ஓய்வு முக்கியம். அஜீரணம்,கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

விருச்சிகம்: சோம்பல் தவிர்த்தால், உயர்வுகள் வரத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பிறர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். இளம் வயதினர், பெற்றோர் பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில், சுணக்கம் தவிர்த்தால், சீரான வளர்ச்சி உண்டு. அரசுப்பணியில் உள்ளோர்க்கு அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிட்டும். அரசியல் சார்ந்தோர் வீண் கேளிக்கை தவிர்ப்பதும், வாக்கில் கவனம் செலுத்துவதும் நல்லது. கலை, படைப்புத் துறையினர் சிலருக்கு அரசுவழி பாராட்டு கிட்டும். இரவுநேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். தொற்றுநோய், ரத்த அழுத்த மாற்றம், தூக்கமின்மை வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

தனுசு: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்பு உணர்வு மிகமிக முக்கியம். கையெழுத்திடுகையில் அலட்சியமும் பணியில் கூடாது. வீண் புலம்பல் விபரீதமாகலாம், தவிருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள் வரத்தொடங்கும். தம்பதியர், ப்ரஸ்பரம் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வர்த்தகத்தில் நேரடி கவனமும், நேர்மையும் மிகமிக முக்கியம். அயல்நாட்டு வர்த்தக அனுமதிகள் கைகூடும். அரசுத் துறையினர் கவனத்தை திசைதிருப்பாமல் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு நிதானம் மிக அவசியம். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். பல், எலும்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு,மங்களம் சேர்க்கும்.

மகரம்: சீரான நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் புதிய பொறுப்பும் அதனால் பெருமையும் அதிகரிக்கும். பிறரால் ஏற்பட்டிருந்த வீண்பழி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு,மனை யோகம் உண்டு. குடும்ப ரகசியங்களை பொது இடத்தில் பேசவேண்டாம். செய்யும் தொழில் செழிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல் சார்ந்தோர்க்கு பாராட்டு, பதவி வாய்ப்பு உண்டு. அரசுப் பணியினர் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு கணிசமான வாய்ப்புகள் வரும். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. இடுப்பு, அடிவயிறு, கழுத்து, முதுகு, கால் உபாதைகள் வரலாம். நவகிரஹ குருபகவான் வழிபாடு, கோடி நன்மை சேர்க்கும்.

கும்பம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரிவர்களால் பேசப்படும். இடமாற்றம், பதவி, ஊதியம் மனம்போல கிட்டும். குடும்பத்தில் அமைதி உருவாகும். அது நிலைக்க, வாக்கில் இனிமை வேண்டும். வீடு,மனை மாற்ற, புதுப்பிக்க வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி சீராகும். பிறரை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். அரசுப் பணியில் உள்ளோர்க்கு திடீர் பதவி,பொறுப்பு வரும். அரசியல் சார்ந்தவர்கள் பிறருக்கு ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. கலை, படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுவது முக்கியம். பயணங்கள் அதிகரித்தாலும் அதனால் ஆதாயம் உண்டு. இடுப்பு, கண், நரம்பு உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்

மீனம்: வாக்கில் கவனம் இருந்தால், வாழ்க்கை இனிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்களுக்கு உரிய பெருமைகள் சேரும். பிறர் தவறை பெரிது படுத்த வேண்டாம். பொறுப்புச் சுமை அதிகரிக்கலாம். திட்டமிட்டுச் செய்யுங்கள். இல்லத்தில் சுமுகப் போக்கு நிலவும். பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளைக் கேட்டால் சுபதடைகள் நீங்கும். தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். வர்த்தகத்தில் அலட்சியம் கூடாது. அரசியல் சார்ந்தோர்க்கு வாக்கில் நிதானம் தேவை. அரசுப்பணியில் உள்ளோர் கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனமாக இருங்கள். கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீரமையுங்கள். தூக்கமின்மை, சோர்வு, சுளுக்கு, பல் உபதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, வாழ்வை மணக்கச் செய்யும்.

Read More