Tamilnadu

குற்றம்சினிமாதமிழ்நாடு

நடிகர் கிருஷ்ணா கொக்கைன் எடுத்து கொண்டாரா? சோதனையில் வெளிவந்த உண்மை

தடை செய்யப்பட்ட போதை பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை செய்தனர். மேலும், அவற்றை நடிகர் கிருஷ்ணா பயன்படுத்தினாரா என்று மருத்துவ சோதனை நடைபெற்றது.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பணப்பரிவர்த்தனை மேற்கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில், நேற்று (ஜூன் 25) நடிகர் கிருஷ்ணா காவல் நிலையத்திற்கு வருகை தந்ததில் இருந்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவை ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்திய வழக்கில் இதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் வேறு சில நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ. 16 மணி நேரமாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக, மூன்று விஷயங்களை மையப்படுத்தி விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நடிகர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. இது தவிர போதை பொருளை விற்பனை செய்தாரா? என்றும், இவற்றை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்தாரா? என்றும் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சர்வதேச யோகா தினம் 2025-எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது…

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன் விளைவாக 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா என்பது சுவாசக் கட்டுப்பாடு மற்றும் தியானம் உள்ளிட்ட பல நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பழமையான அதே சமயம் பாரம்பரியமிக்க உடற்பயிற்சி ஆகும். வழக்கமான அடிப்படையில் தினசரி யோகா செய்வதால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
ஆனால் நீங்கள் யோகாவின் நன்மைகளை பெற இந்த பயிற்சியை காலை அல்லது மாலை எப்போது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? யோகாவை எப்போது செய்தால் என்ன பலன் ஒன்று தானே என்றும் சிலர் யோசிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் எந்த நேரத்தில் யோகா செய்தால் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது உங்கள் உடல் மற்றும் தினசரி அட்டவணையை பொறுத்தது.
யோகா குருவும் அக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனருமான அக்ஷரின் கூற்றுப்படி, “ உங்கள் காலை நேரத்தை யோகாவுடன் தொடங்குவது உடலில் இருக்கும் தசை குழுக்களை (muscle groups) செயல்படுத்தவும், முழு உடலை உற்சாகப்படுத்த மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஒரு சிறந்த வழி. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் முழுமையான மற்றும் உற்சாகமூட்டும் பயிற்சியை வழங்கும் செயலாக கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் நீங்கள் விழிப்பு மற்றும் கவனத்துடன் இருப்பதை உறுதிசெய்கிறது. எனவே இதன் காரணமாக உங்கள் உற்பத்தித்திறனும் சிறப்பாக இருக்கும். ஆனால் இரவு நீண்ட நேரம் நீங்கள் அசையாமல் படுத்து தூங்கி எழுவதன் காரணமாக நல்ல வார்ம்-அப் மூலம் யோகா அல்லது சூரிய நமஸ்கரம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள் முதலில் நீங்கள் ஸ்ட்ரெச் பயிற்சிகளில் கூடுதல் கவனமுடன் அதே சமயம் மென்மையாக ஈடுபட வேண்டும்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன
யோகா செய்வதால் மனநலன்கள்

யோகா செய்வதால் உடல் நலன் தவிர மனநலன் சிறப்பாக நிர்வகிக்க முடியும். யோகா மன அழுத்தத்தைசமாளிக்க உதவுகிறது. மனச்சோர்வு உடல் மற்றும் மனதில் பேரழிவு விளைவுகளை உண்டு செய்கிறது. எந்த சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை யோகா பயிற்சி அளிக்கிறது.

கவனத்தை ஒருங்கிணைக்கிறது

யோகா செய்வது கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த கவனத்தை அளிக்கிறது. தியானம் செய்வது அலைபாயும் மனதை நேர்மறைக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் மேன்மையான செயல்பாடுகள் மூலம் வெற்றியை ருசிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் தோரணை பயிற்சிகள் மூலம் உட்கார்ந்த வாழ்க்கை முறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. யோகாசனம் செய்வது உடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. விறைப்பை குறைக்கிறது. மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு வலிமையையும் நெகிழ்வ்த்தன்மையும் அளிக்கிறது.

ஒழுக்கம் மற்றும் நினைவாற்றல்

பதஞ்சலி யோக சூத்திரங்களில் எழுதப்பட்ட யம மற்றும் நியம செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் நினைவாற்றலையும் அதிகம் பெற முடியும்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பம் மாற்றம் செய்ய வேண்டுமா…தேர்தல் ஆணையம்

விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை விரைந்து வழங்குவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொண்டாலோ சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு 15 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு மாதத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் நிலையில், அதனை 15 நாட்களாக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.
இந்திய அஞ்சல் துறை வழியாக அடையாள அட்டையை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களை அது சென்றடையும் வரை, அது வரும் வழித்தடத்தை கைபேசி மூலம் அறியும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக வாக்காளர்களுக்கான சேவை வழங்கலை எளிதாகவும் விரைவாகவும் அணுகும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டி.என்.பி.எஸ்.சி. பதவி உயர்வில் சமூகநீதி – குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

டி.என்.பி.எஸ்.சி. பதவி உயர்வில் சமூகநீதி: குழு அமைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் G.M.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சொத்துக்களை பதிவு செய்வதால் மட்டுமே ஒருவர் உரிமையாளர் ஆக முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொத்துகளை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.
ஒரு சொத்தின் உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூன் 10) ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வெறும் பத்திரப்பதிவு ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் அந்தச் சொத்தின் முழுமையான உரிமையாளர் ஆகிவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பதிவு ஆவணங்கள் என்பது ஒரு கூடுதல் ஆதாரமாக மட்டுமே கருதப்படும் என்றும், சொத்தின் முழுமையான உரிமைக்கு இன்னும் பல ஆவணங்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முழுமையான உரிமைக்கு என்னென்ன தேவை? ஒரு சொத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கோ வெறும் பதிவு ஆவணங்கள் மட்டும் போதுமானது அல்ல. மாறாக, அந்தச் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாகக் கொண்டிருப்பதுதான் ஒருவரை அந்தச் சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளராக அங்கீகரிக்கும்.
பதிவு விவரங்கள்: சொத்து அமைந்துள்ள சர்வே எண்கள் மற்றும் குறிப்பிட்ட சொத்தின் உரிமை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான உள்ளூர் அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள்.
விற்பனை விவரங்கள்: சொத்து விற்கப்படுவதன் மூலம் அதன் உரிமை மாற்றப்படுகிறது என்றால், எவ்வளவு தொகைக்கு அது விற்கப்படுகிறது என்ற விவரங்கள் (Sale Agreement). விற்பனைக்கான நிபந்தனைகள், விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் கையொப்பம், சாட்சிகளின் கையொப்பம்.
சட்டப்பூர்வச் செலவுகள்: முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) செலுத்தியதற்கான ஆதாரம் உள்ளிட்டபதிவு ஆவணங்கள்: பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பதிவு ஆவணங்கள்.
உரிமைச் சான்றிதழ்: இவை அனைத்தும் முடிந்த பிறகு, பத்திரப்பதிவு அலுவலகம் வழங்கும் சொத்துரிமைக்கான சான்றிதழ்.
தடையில்லாச் சான்றிதழ் (NOC): குறிப்பிட்ட அந்தச் சொத்தின் மீது எந்த வங்கிக் கடனோ அல்லது வேறு எந்தப் பிரச்சினைகளோ நிலுவையில் இல்லை என்பதற்கான தடையில்லாச் சான்றிதழ்.
சொத்து வரி ஆவணங்கள்: குறிப்பிட்ட அந்தச் சொத்திற்கான சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள்.
அரசு அலுவலகச் சான்றிதழ்: இவை அனைத்தும் அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சொத்தின் உரிமை பற்றிய விவரங்களைக் கொண்ட இறுதிச் சான்றிதழ்.
இந்த அனைத்து ஆவணங்களும் முழுமையாகச் சேர்ந்திருந்தால் மட்டுமே, ஒரு சொத்து சட்டபூர்வமாக மற்றொருவருக்கு முழுமையாக அதன் உரிமை மாற்றப்படுகிறது என்று கருதப்படும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக்கூட்டம்
தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” – மதுரையில் அமித்ஷா

தமிழ்நாடு பாஜகவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். நேற்று மதுரை வந்த அமித்ஷா, இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பாஜக உயர்மட்ட மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மதுரை, ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அங்கு பேசிய அவர், “மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” எனத் தெரிவித்தார். அவர் பேசியதாவது: “மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன். 3 ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்டது தமிழ். ஆனால், தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது.
இந்தக் கூட்டம் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கூட்டம். பாஜக – அதிமுக கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும். திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் சொன்னது சரிதான். என் நீண்ட அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். திமுகவை அமித்ஷாவுக்குப் பதில் மக்கள் தோற்கடிப்பார்கள். வரும் தேர்தலில் திமுகவை மக்கள் தூக்கி எறியக் காத்திருக்கிறார்கள். எங்கிருந்தாலும் எனது சிந்தனை தமிழ்நாட்டைப் பற்றியே இருக்கும்.
ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை ஒடுக்க முந்தைய அரசுகள் முயலவில்லை. ஆனால் மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகளைத் துல்லியமாக அழித்துள்ளோம். மோடி ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலையை அடைந்துள்ளோம். ஆபரேஷன் சித்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் வீடு புகுந்து அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் இந்தியா 4.19 ட்ரில்லியன் வளர்ச்சிக் கண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்திற்கு 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி கொடுத்தது. மோடி அரசு 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

ஏஐ மூலம் சரியாகும் நெடுஞ்சாலைகள்… 8,400 கி.மீ தமிழக ரூட்- NHAI டெக் பிளான்!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சாலைகளை பராமரிக்க தொழில்நுட்பத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு
ஏஐ மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டம்
பழுதுகளை சரிசெய்து சீரான பயணத்திற்கு ஏற்பாடு
செயற்கை நுண்ணறிவு உட்புகாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் ஏ.ஐ பேச்சு தான். இந்நிலையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவின் உதவியை நாட முடிவு செய்துள்ளனர். இதற்காக NHAI எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு சேவை களமிறக்கப்படவுள்ளது.
இதன்மூலம் எங்கெல்லாம் சாலைகளில் பள்ளங்கள் இருக்கின்றன, அறிவிப்பு பலகைகள் சேதமடைந்து உள்ளன, தெரு விளக்குகள் எரியவில்லை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, முறைகேடான வகையில் தடுப்புகள் அமைத்தல் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. மேலும் சாலைகளில் விரிசல், தேய்மானம், வெள்ளை நிற குறியீடுகள் அழிப்பு, எல்லையோர கோடுகள், சட்டவிரோத பார்க்கிங், தடுப்புகளை அகற்றி வாகனங்களை இயக்குவது, அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவையும் கண்காணிக்க முடியும்.
இதுதொடர்பான வீடியோ வடிவிலான ஆதாரங்களை நெடுஞ்சாலை துறைக்கு கிடைக்கும். அதைக் கொண்டு விரைவாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஐந்து மண்டலங்களாக பிரித்து நெடுஞ்சாலை தொழில்நுட்ப வசதிகளை அளிக்கவுள்ளனர். அதில் தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அடங்கும். 2024 நிலவரப்படி இந்தியாவில் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.இதில் முதல்கட்டமாக 38,102 கிலோமீட்டர் நீளத்திற்கு ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு வசதிகள் பொருத்தப்படவுள்ளன. இதேபோல் தமிழகத்தில் 8,400 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்படவுள்ளன. இந்த கண்காணிப்பு நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக செய்வதில் சிரமங்கள் இருக்கின்றன. எனவே டேஷ்கேம் அனலிடிக்ஸ் சர்வீஸ் (DAS) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இவர்கள் ஏஐ அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு கட்டமைப்பு வசதிகளை வழங்கவுள்ளனர். நெடுஞ்சாலைத் துறைக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே ஏஐ தொழில்நுட்ப வசதிகள் மூலம் சாலை வசதிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

Read More
Covid19தமிழ்நாடு

கொரோனா தொற்று..! மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 1,806 பேரும், குஜராத்தில் 717 பேரும், டெல்லியில் 665 பேரும், மேற்கு வங்கத்தில் 622 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
மேலும் இது வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வருகிறதா பெருந்தொற்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கடந்த 2019 இல் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய பெருந்தொற்று குறித்த ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பாக, ‘மெர்ஸ்’ (MERS) என்ற வகை வைரஸ் பரவியது. இது பெரிய அளவில் பரவாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு மரணத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த வடிவமாகவே ‘சார்ஸ் கோவிட்’ (SARS-CoV) எனப்படும் கொரோனா வைரஸ் உருவெடுத்து, உலகெங்கும் மிக வேகமாகப் பரவியது.
கொரோனாவைப் போலவே, இந்த வைரஸும் சுவாச மண்டலத்தின் வழியாக மனித உடலுக்குள் நுழையக்கூடியது. எச்.கே.யு.-5 வகை வைரஸ் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இவை செல்களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால், அதற்கான திறன் இந்த புதிய வைரஸுக்கு இருப்பதால், இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்-ரயில் நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பணிகள் தீவிரம்!

சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது திறக்கப்பட்டு ஒரு ஆண்டையும் தாண்டி உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து மக்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வந்தனர். அடிப்படை வசதிகள் மற்றும் இணைப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.
கிளாம்பாக்கம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஸ்கைவாக் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பனிகள் நடைபெறும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாம்பரம் பகுதிக்கு செல்ல பேருந்து வசதி மற்றும் தனியார் வாகனங்கள் வசதி மட்டுமே இருந்து வந்தது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதேபோல் மெட்ரோ ரயிலும் வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் நிலையில் விரைவில் அதற்கான பணிகளும் தொடங்க உள்ளது.
இதேபோல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஸ்கைவாக் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏனெனில் மக்கள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்தை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மக்கள் ஆபத்தான சாலையை கடக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனை தவிர்க்க மாநகராட்சி சார்பில் ஸ்கைவாக் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு எளிதில் செல்லலாம். இந்த ஆகாய நடைமேடையானது சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு எளிதில் செல்லலாம். இந்த பணிகள் நடைபெறும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதேபோல் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ளன. விரைவில் இந்த ரயில் நிலையம் திறக்கப்படும். இது திறக்கப்பட்டால் தாம்பரத்தில் இருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் இருபுறமும் ஏறி, இறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைமேடையும் திறக்கப்பட்டால் மேலும் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் பேருந்து நிலையத்தில் இறங்கி ரயில் நிலையத்தை பயன்படுத்தி தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More