சிங்காரம் (Singgaramm – 2026) தமிழ் திரைப்படத்தின் திரை விமர்சனம்…
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிங்காரம் (யோகி பாபு), அடிப்படை அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடையாள அட்டைகள் கிடைக்காமல் அவதியுறும் தன் மக்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு எளிய மனிதன். எதிர்பாராத விதமாக அடிக்கும் ஒரு லாட்டரி பரிசு அவரது வாழ்க்கையையும், அவரது சமூகத்தின் பொருளாதார சூழலையும் மாற்றுகிறது. இதன் தொடர்ச்சியாக, அவர் அரசியல் களத்தில் இறங்கி, ஒரு சாமானிய மனிதனாக இருந்து எப்படி சட்டமன்ற உறுப்பினராக (MLA) உயர்கிறார், தன் மக்களுக்கு எப்படி அங்கீகாரம் பெற்றுத் தருகிறார் என்பதே படத்தின் முக்கிய கதை…
கே. வி. கதிர்வேலு இயக்கத்தில், யோகி பாபு மற்றும் எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான சிங்காரம் …
கதாநாயகனாக யோகி பாபு எமோஷனல் மற்றும் காமெடி காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். தந்தையாக வரும் எம். எஸ். பாஸ்கர், சென்ராயன் மற்றும் வேலா ராமமூர்த்தி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் செம்மையாகச் செய்துள்ளனர்.
ஒரு சாமானிய நரிக்குறவர் இன மனிதனின் உரிமைப் போராட்டத்தையும், அரசியலையும் பேசும் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வுத் திரைப்படம்..
படத்தில் வரும் வசனங்கள் ..மனதில் ஆழமாக பதிகிறது இயக்குனர் பலமாக இந்த கதையில் பாதித்திருக்கிறர் என்றே புரிகிறது .. வசனங்கள் அத்தனை அழுத்தமாக உள்ளது…
படத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் ஐயாகண்ணு அவர்களின் வேடம் ஏற்று நடித்துள்ள திரு வேல ராமமூர்த்தி அருமையாக அந்த கதா பாத்திரத்தை செய்திருக்கிறார்…
படத்தில் பெரிதாக காமெடி ஒன்னும் எடுபடவில்லை… காமெடி நடிகர்கள் அவ்வளவு பேர் இருந்தும் ஏதோ அங்கு மிஸ் ஆகிறது … M S பாஸ்கர் இயல்பாகவே நடித்துள்ளார்…
யோகிபாபு கதநாயகனாக வலம் வருவதால் அதிக நகைச்சுவைக்கு இடமில்லாமல் போனது.. காதலை சொல்ல வந்த இயக்குனர் எதோ அங்கு தடுமாற்றத்தில் காதலை விட்டு விடுகிறார்..
தீபா சங்கர், மாரிமுத்து, படவா கோபி உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
சாம் சி.எஸ். இசை படத்தின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு அவரது பின்னணி இசை கூடுதல் வலுசேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், கிராமப்புற இயற்கைச் சூழலையும் மக்களின் வாழ்வியலையும் அழகாகப் படம்பிடித்திருக்கிறார். காட்சிகளின் இயல்புத்தன்மை படத்தின் கதையோட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
மொத்தத்தில்…
சிங்காரம் வெறும் நகைச்சுவைத் திரைப்படம் மட்டுமல்ல; நரிக்குறவர் சமுதாயத்தில் பிறந்து ஒரு அரசியல்வாதியாக உயர்வதில் என்ன கடின போராட்டங்கள் உள்ளது என்பதை இயக்குனர் எடுத்து காட்டியுள்ளார்.. இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படை என்றும் கூறியுள்ளார்.. அதிகம் அறியப்படாத ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், உரிமைக்கான போராட்டத்தையும் பேசும் திரைப்படம்.
