nelson

இந்தியாசினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

‘ஜெயிலர் 2’திரை விமர்சனம்

திரை விமர்சனம்
ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு திரை விருந்து..
இனிமேல் ரஜினி நடித்தார்.. என்பதை விட அதிகம் நடந்தார்…. என்று சொல்ல வேண்டும்.. ஒவ்வொரு பிரேமிலும் அசத்துகிறார்.. 74 இளைஞராக வலம் வருகிறார்… இப்பொது வரும் படங்கள் எல்லாம் போதை பொருள் மாபியா கதை…யை விட்டுவிட்டு …. இதில் சிலை கடத்தல்… இதெல்லாமே 50 வருஷத்துக்கு முந்தி வந்துள்ள MGR நடித்த உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் சிவாஜி நடித்த திரிசூலம் படத்தில் வைத்து விட்டார்கள் ..
ரஜினி என்ற மாஸ் இமேஜ் தான் படத்தின் வெற்றி…படத்தில் இடைவேளை
வரை மலையாள நடிகர் சுராஜ் வில்லனாக பின்னி எடுத்துள்ளார்… அவரை ஏனோ கொன்று விட்டார்கள்… இடைவேளைக்கு பிறகே எஸ் ஜே சூர்யா வருகிறார் என்றலும் வில்லனாக மிளிர்கிறார்..இவ்வளவு நடிகர் தேவையா என சலிக்க தோன்றுகிறது
.. ஆனால் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் அவதால் ..இவர்கள் தேவை போலும்…. இயக்குனர் சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் .. இசை ஆட வைக்கிறது .. நகைச்சுவை நடிகர்கள் படம் முழுவதும் அமர்க்களம் …
முதல் பாகம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரஜினிக்கான மாஸ், ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதை, தியேட்டர் தருணங்கள், சர்ப்ரைஸ் கேமியோக்கள் என கலந்து கட்டி ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக கொடுத்து உள்ளார் நெல்சன். தற்போது இந்த இரண்டாம் பாகத்திலும் அதே பாணியை கடைபிடித்து முதல் பாகத்தை விட சுவாரஸ்யமான ஒரு படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் குறிப்பாக ‘கபாலி’ படத்துக்குப் பிறகு ரஜினிக்கான மாஸ் இலக்கணம் முற்றிலும் மாறிவிட்டது. அதை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட நெல்சன், தன் வழக்கமான நகைச்சுவையையும், ரஜினியின் அதிரடி மாஸ் பிம்பத்தையும் கச்சிதமாக இணைத்துள்ளார்.
படத்தின் முதல் பாதி முழுக்கவே நகைச்சுவையோடு நகர்கிறது. யோகி பாபு, ’நாடோடிகள்’ நமோ நாராயணா தொடர்பான காமெடிகள் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
இன்னொரு பக்கம் சுராஜ் வெஞ்சரமூடு – ரஜினி இடையிலான ஆடு புலி ஆட்டத்தை வைத்து இரண்டாம் பாதிக்கான மோதலை மிக நிதானமாக உருவாக்கி இருக்கிறார்.
பாலத்தில் நடக்கும் ஸ்னைப்பர் காட்சி, இடைவேளைக்கு முன்னால் சுராஜின் இடத்தில் நடக்கும் சண்டை என தியேட்டர் தெறிக்கும் தருணங்கள் படம் முழுக்கவே தாராளமாக வைக்கப்பட்டுள்ளன.
“50 வருஷமா, யார் யாரோ என்னை முடிக்க ட்ரை பண்ணாங்க, ஆனா யாராலும் முடியல” என்று க்ளைமாக்ஸில் ரஜினி பேசும் பன்ச் வசனத்துக்கு அப்ளாஸ் தெறிக்கிறது.
மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு காமெடி கலந்த வில்லத்தனத்தில் அசத்துகிறார். வழக்கம்போல தனது வித்தியாசமான மேனரிசத்தால் எஸ்.ஜே.சூர்யா கவனம் ஈர்க்கிறார்.
நடிகை வித்யா பாலனுக்கு வலுவான கதாபாத்திரம். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை என்றாலும் ஸ்டைலாக சிகரெட் ஊதிக் கொண்டே ரஜினியை மிரட்டும் காட்சியில் ஈர்க்கிறார்.
ரஜினி என்ற மாயாஜாலத்தின் முன் அவை மறக்கப்படிப்படுகின்றன. வயது முதிர்வின் காரணமாக ரஜினி முந்தைய காலங்களைப் போல அதிரடியாக சண்டை போடவோ, நடனமாடவோ முடியாது என்பதை உணர்ந்து, அவரது பலத்தை புரிந்து வைத்து ஒரு பொழுதுபோக்கு மசாலா விருந்தை படைத்துள்ளார்.
மொத்தத்தில் படம் முழுக்க சத்தம்… ரத்த களரி…இருந்தாலும் தியேட்டரில் விசில்..சிரிப்புகள் …அனைத்தும் பலமாக கல்லா கட்டும் என்றே நம்பலாம்-..பூஜா விடுமுறைக்கு வேறு படமே இல்லாததால் …ரஜினியின் ஜெயிலர் 2..முன்னோக்கி ஓடும் ….kk

Read More