மீசையை முறுக்கு 2 திரை விமர்சனம்….
மீசையை முறுக்கு 2 திரை விமர்சனம் : ஏழு ஆண்டுகளுக்கு முன்னாள் வந்த மீசையை முறுக்கு ,முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் இது புதிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்கள் இந்த பாகத்திலும் உள்ளன
மீசையை முறுக்கு 2 காட்சிகள் ரசிகர்களை செமையாக கனெக்ட் செய்கின்றன.அதிகமான காண பாடல்களை உள்ளே விட்டுள்ளார்…
திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு ,இசை என மொத்த வேலைகளையும் திறம்பட செய்துள்ளர் ஹிப்ஹாப் தமிழா என்றே சொல்ல வேண்டும்…
கானா பாடல்களை கலக்கலாக பாடும் தாஸ் திறமையை பார்த்து, பெரிய மியூசிக் லேபிளின் வாரிசு அவரை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து வருகிறார். ஆனால், அங்கே உள்ள சிஸ்டம் காரணமாக தாஸுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அங்கிருந்து கட் ஆகும் கதை தாஸின் பேரன் ஜீவா (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு சாதாரண பப்பில் கேப் கிடைக்கும் போது தனது ஹிப்ஹாப் பாடல்களை பாட முயற்சிக்கும் நபராக அறிமுகம் ஆகிறார்.
அவரது திறமையை பார்த்து சொக்கிப் போகும் ஷீலா (கெத்திகா சர்மா), வாரிசு நடிகர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால், ஜீவாவை அந்த நெப்போ கிட் அசிங்கப்படுத்த இருவருக்கும் இடையே கை கலப்பு நடக்கிறது. அதன் பின்னர் ஜீவாவுக்கு அவங்க தாத்தா தாஸ், அப்பா டைகர் சிவாவின் கதையை சொல்கிறார். அப்பாவின் இசை திறமையும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் கிடைக்க முடியாமல் போகும் அளவுக்கு என்ன நடந்தது? சாதாரண பஸ் டிரைவராக தனது மகனை வளர்த்து ஆளாக்க அவர் செய்த தியாகங்கள் தெரிய வர அதன் பின்னர் ஜீவா தனது லட்சியத்தை நோக்கி பயணித்தாரா? அல்லது நம்மள மாதிரியான ஆட்களுக்கு இதெல்லாம் செட் ஆகாது என வேலை பார்க்க போய்விட்டாரா? என்பது தான் இந்த மீசையை முறுக்கு 2 கதை.
இசையை ஓர் வட்டத்துக்குள் கொண்டு வர முடியாது, இசைக்கு எல்லை கிடையாது
இசையை கட்டம் கட்டினால் அது எப்படி கிரியேட்டிவ் ஆக இருக்க முடியும், போன்ற வசனங்கள் மனதில் நிற்கும்…காட்சிகளாக உள்ளது..
சாதாரணமாக பாடும் இசையையையும் மக்கள் கொண்டாடுகிறார்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதே கருத்தாக வைக்கிறார் இயக்குனர்
genzi ரசிப்பார்கள்…ரசிக்கலாம் – kk
