Elementor #12929
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில்கள் பொதுமக்களுக்கு பெரிதும் கைகொடுத்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்வுக்குச் சென்ற லட்சக்கணக்கான மக்கள் திரும்ப முடியாமல் அவதிப்பட்ட நிலையில், 3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்களை இயக்கி, அதுவும் கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் டிக்கெட் கட்டணம் இன்றி இலவசமாகவே இயக்கியது மெட்ரோ நிர்வாகம். இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக ஏராளமானோர் சென்னையில் இருந்து வெளியூர் செல்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை சமாளிக்கவும், வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் இன்று மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
