இந்தியா

இந்தியா-இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின..!

பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இந்தியா-இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இன்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக பிரதமர் மோடி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து ரணில் விக்ரமசிங்கேவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதேபோல் இருநாட்டு உறவுகள், இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்தும் பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் விசாரித்த்தாக தகவல் வெளியாகியுளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இந்தியா-இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

UPI பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் டெல்லியில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடி சந்திப்பில் கையெழுத்தாகின.