அரசியல்தமிழ்நாடு

அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர் என் ரவி – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசு எடுக்கும் புதிய முயற்சிகளுக்கும் பல நல்ல திட்டங்கள் குறித்தும் கருத்து என்ற பெயரில் அத்துமீறி பேசுவதையே ஆளுநர் ஆர் என் ரவி வாடிக்கையாக வைத்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் .

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது :

அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது . இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழகங்களில், 20 பல்கலைக்கழகங்கள் . தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவை; டாப் 100 கல்லூரிகளில், 30 கல்லுரிகள் தமிழ்நாட்டில் இருப்பவை

இப்படி கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை ஆளுநர் ஆர் என் ரவி அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை

சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநர் கூறியதற்கு மாறாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், அதில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்

ஆளுநர் ஆர்.என்.ரவி. தன்னை முழு அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டுள்ளார்; உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டை, ஆளுநர் தனது அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்