அரசியல்தமிழ்நாடு

மார்ச் 20-ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2023 – 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளதாக சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நிதி நிலை அறிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2023 – 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார் என்றார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை விவகாரமானது செய்தியாளர்கள் கேள்வி எழுபபிய போது, ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்றும், சட்டப்பேரவையில் யார் யாரை எங்கே உட்கார வைப்பது என்பது தனது முடிவு என்று கூறினார். எனவே அதன் அடிப்படையில் ஏற்கனவே இந்த விவகாரம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் குறித்து மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்த. அவர், ஆளுநர் உரையின்பது பேரவை மாடத்தில் அமர்ந்து செல்போன் வாயிலாக வீடியோ எடுத்த விவகாரம் குறித்து உரிமைக் குழு முடிவெடுக்கும் என்றார்.