இந்தியா

உ.பி.யில் நிலவி வரும் கடும் குளிர் : ஒரேநாளில் 25 பேர் பலி..!

உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. இதுகுறித்து இருதய சிகிச்சை நிறுவத்தின் கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று இருதய நோய் பாதிப்பு ஏற்பட்ட 723 பேர் அவசர சிகிச்சைக்கு வந்திருந்தனர். அவர்களில் 41 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் அதிக குளிர் தாங்கமுடியாமல் உயிரிழந்தனர். இது தவிர 17 பேர் இறந்த நிலையில் சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டனர். கடும் குளிரான இந்த காலநிலையில் குறிப்பாக நோயாளிகள் தங்களை குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக ஆசிரியர் கூறுகையில், மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படாது. இந்த காலநிலையில் எந்த வயதினருக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரும் முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பது நல்லதென்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.