மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட விமான விபத்து..!
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது இன்று ஒரு விமானம் மோதிய விபத்தில் அந்த விமானம் முற்றிலும் சேதம் அடைந்தது.

பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் விமானி உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ரேவா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ரேவா எஸ்.பி தெரிவித்துள்ளார்.
