குஜராத் முதலமைச்சராக 2வது முறையாக பொறுப்பேற்று கொண்டார் பூபேந்திர பட்டேல்
குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் இரண்டாவாது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோன்று குஜராத்தில் இதுவரைக்கும் பாஜக பெற்றிராத வெற்றியை தற்போதைய தேர்தலில் பெற்றிருக்கிறது. மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஏழாவது முறையாக மீண்டும் குஜராத் மாநிலத்தை ஆளும் அதிகாரத்தை பெற்று இருக்கிறது பாஜக. தற்போது முதல்வராக இருக்கும் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து ஆளுநர் அவரை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், காந்தி நகரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பூபேந்திர பட்டேல் இரண்டாவாது முறையாக குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக முத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
