அரசியல்இந்தியா

ராகுலின் நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது – பிரியங்கா காந்தி

ராகுலின் நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்களா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

“இந்திய ஒற்றுமை யாத்திரை” நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிணைத்து கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா மாநிலத்தை கடந்து ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒற்றுமை நடைபயணம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் நடைபயணத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஆந்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் ராகுல் காந்தியின் பின்னால் நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நடைபயண கூட்டம் நாட்டின் முன்னேற்றத்தையும், மாற்றத்திற்கான விருப்பத்தையும் காட்டுவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

150 நாட்கள் நடைப்பயணம் செல்ல திட்டமிடப்பட்டுள்ள ஒற்றுமை யாத்திரையில் 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.