உலகம்

உக்ரைன் மீதான போரில் 67,000 ரஷ்ய வீரர்கள் மரணம்

எதிரி நாடான உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் போரில் 67 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது. 515 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் இழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

நேட்டோ படைகளில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. அதே வேளையில் போர நடத்தி வரும் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான “தி கீவ் இன்டிபென்டன்ட்” வெளியிட்டுள்ள தகவலின் படி உக்கிரனுக்கு எதிரான போரில் ரஷ்யா இதுவரை 67,470 ரஷ்ய ராணுவ வீரர்களை இழந்துள்ளது. அதேபோல், 2,584 பீரங்கிகள், 260 போர் விமானங்கள், 245 ஹெலிகாப்டர்கள், 16 கப்பல்கள், 1,361 தானியங்கி விமானம், 5,248 தாக்குதல் கவச வாகனம், 4,039 ரஷ்ய ராணுவ வாகனம், 189 ஏவுகணை தாக்குதல் வாகனம் உள்ளிட்டவை ரஷ்யா இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யப்படைகள் பெருமளவில் இழந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்ய ஆண்கள் கட்டாயம் ராணுவத்தில் சேர வேண்டும் எனவும், 3 லட்சம் போர் வீரர்களை அணிதிரட்டும் நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.