இந்தியா

உத்திராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து- சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

உத்திராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

உத்திராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் இருந்து தனியார் நிறுவனமான அயன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டுள்ளது. 6 பேருடன் கேதார்நாத்தில் இருந்து பாடா ஹெலிபேடுக்கு சென்ற ஹெலிகாப்டர் கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருட் சட்டி என்ற இடத்தில் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது.

இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 6 பெரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் இயக்கிய விமானியும் உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விவரங்களை உத்தரகாண்ட் மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர் சேர்ந்த சுஜாதா(56), கலா (50), மற்றும் பிரேம்குமார் (63) உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களை, தவிர குஜராத் மாநிலம் பாவ் நகரச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். விமானி உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.