சினிமா

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன்..!

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட என பல மொழிப்படங்களில் படங்களில் முன்னணி நடிகராக வலம் வைத்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன். முதல்வன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரங்கள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன .

இந்நிலையில் தற்போது பல முக்கிய திரைப்படங்களில் பிற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து திரையுலகை கலக்கி வருகிறார். பல வித்தியாசமான வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் அர்ஜுன் .

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேசுடன் புதிய படத்தில் அர்ஜுன் நடிக்கிறார். ஏற்கனவே சேவகன், பிரதாப், தாயின் மணிக்கொடி, ஜெய்ஹிந்த் 2, ஏழுமலை உள்ளிட்ட பல படங்களை அர்ஜுன் இயக்கி நடித்திருந்தார் .

சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை அர்ஜுன் இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ஜுன் மீண்டும் படம் இயக்கக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அர்ஜுன் இயக்கப்போகும் அந்த படம் தெலுங்கில் தயாராக உள்ளதாகவும் . இந்த படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் . படத்தின் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க இருப்பதாவும் கூறப்படுகிறது .

தமிழில் பட்டத்து யானை என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்து இருந்தார். தமிழ், கன்னட மொழியில் வெளியான சொல்லி விடவா படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ஆக்சன் கிங் ஒரு படம் இயக்க இருப்பது அதுவும் தனது மகளை வைத்து அவர் இயக்க போவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது