டாம் குரூஸின் மிரளவைக்கும் நடிப்பில் உருவான ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தின் மிரட்டல் ட்ரைலர் வெளியானது..!
ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் டாம் குரூஸ். ஆக்சன் படங்களுக்கு பெயர் போன அவர் நடித்த மிஷன் இம்பாசிபிள் படங்களின் அணைத்து பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .
தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து ஆக்சன் மன்னனாக வலம் வரும் டாம் குரூஸ் உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் மிகவும் பிடித்த கதாநாயகனாக இன்று வரை திகழ்கிறார்.
நாம் முன்பே சொன்னபடி டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவரும் மிஷன் இம்பாசிபிள் பாகங்கள் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று ஏக போக வசூல் சாதனைகளும் படைத்தது.
இந்நிலையில் அந்த வரிசையில் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7வது பாகமாக மிஷன் இம்பாசிபிள்- டெட் ரெக்கனிங் பார்ட் 1 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நொடி முதலே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது .
