தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் கனிமொழி எம்பி…
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இன்று 10/04/2022 ஞாயிற்றுக்கிழமை, புதிதாக அமைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்பி.


இந்நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், அப்துல் வஹாப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் முக்குளத்தோர் பேரவை தலைவர் சிற்றரசுதேவர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் , மற்றும் முக்குளத்தோர், தேவர்பேரவை நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
