தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியில் இன்று ரூபாய் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அதன்பின் நடைபெற்ற விழாவில் சிறப்புரையாற்றினார் கனிமொழி கருணாநிதி எம்பி .
இந்நிகழ்ச்சியின்போது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு அரசு சார்பில் தலா 1.50 இலட்சம் ரூபாய் மற்றும் படகுகளுக்கு பொறுத்தக்கூடிய மோட்டார் இயந்திரத்தை மானிய விலையில் பெறக்கூடிய பயனாளிகள் இருவருக்கு வழங்கினார் கனிமொழி கருணாநிதி எம்பி

உடன், மீன்வளம், மீனவர் நலன், மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
