அரசியல்தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு..! டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்..

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே சுகேஷ் சந்திரசேகர் அமலாக்கத்துறையின் விசாரணையில் இருக்கும் நிலையில் தற்போது டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தனக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையிலேயே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.