அரசியல்இந்தியா

பாஜக நிறுவன தினம் இன்று – மக்கள் சேவையில் ஈடுபடுமாறு எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது, கட்சியின் நிறுவன தினத்தையொட்டி, இன்று முதல் 15 நாட்கள் சமூக நீதிக்கான நாட்களாக கடைபிடிக்கப்படுவதால் இந்நாட்களில், மக்கள் சேவையில் ஈடுபடுமாறு எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

மேலும், சமூகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களுக்காக மத்திய அரசு கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறும் பாஜக எம்.பிக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.