எல்லை மீறும் இலங்கை கடற்படை..! அச்சத்தில் தவிக்கும் தமிழக மீனவ சமுதாயம்…
கடந்த வாரம் கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 21 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.
இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பகிரங்கமாக ஏலம் விட்ட நிலையில், மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைப் பிடித்துச் சென்றுள்ளது.
தொடர்ந்து மீனவர்களை சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையின் செயல் தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
