அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்…! பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
தமிழகத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட முன்னாள் சட்டமட்ன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது :
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசியில் பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி.
அனைத்துத் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். உண்மையைச் சொல்லி , அதிமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.
அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் . இன்றைய கொடூர நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
யாரைக் கண்டும் ஓடி ஒளிய போவது கிடையாது பிரச்சனை என்றால் நான்
ஓடோடி வருவேன்,” என ராஜேந்திர பாலாஜி பேசியதும், அங்கிருந்தவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினர்.
மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் அமைச்சச்ர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் தொடர்பார்ன பரபரப்பான கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தான் உள்ளாட்சிட் தேர்தர்ல் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்காக விருதுநகர் மாவட்டம் வருகை தந்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசுவார் என்பதை விட, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு தான் அதிகம் இருந்தது.
அந்த வகையில் ராஜேந்திர பாலாஜி தனது பரபரப்பான கருத்துக்களை இன்று முன் வைத்தார் . கைதாகாமல் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், இன்று தான் ஓடி ஒளியப்போவதில்லை என்று பேசியிருப்பது அரசியில் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது .
