இந்தியாசினிமா

விவசாயிகள் குறித்து நடிகை கங்கனா சர்ச்சை பேச்சு..! அடுக்கடுக்காய் வழக்குகள் போட்டு விடாது துரத்தும் காவல் துறை..! முழு விவரம் இதோ…

மத்திய அரசை எதிர்த்து நீண்ட நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய பிரபல நடிகை கங்கனா, தற்போது போலீசிடம் தனது கருத்து குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

டெல்லி எல்லைகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய அகிம்சை போராட்டத்தை காலிஸ்தானி இயக்கம் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா விமர்சித்து இருந்தார்.

கங்கனாவின் அந்த பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது மகாராஷ்டிரா மாநிலம் கர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி நடிகை கங்கனா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் அனுப்பிய சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று காலை 11 மணிக்கு கர் காவல் நிலைய போலீசார் முன் கங்கனா ஆஜரானார்.

Back from police station visit, Kangana Ranaut says 'this country continues  to ill-treat and devalue nationalists' | Bollywood - Hindustan Times

நடிகை கங்கனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது : நடிகை கங்கனா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தானி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார். அதனால் சீக்கிய அமைப்பின் உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது ஐபிசி 295-ஏ-ன் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் தற்போது காவல் நிலையத்தில் ஆஜரான கங்கனாவிடம் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. அனைத்து வாக்குமூலமும் முறையாக பதிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர் .