அரசியல்தமிழ்நாடு

அதிமுக – பாஜக உறவு உறுதியாக உள்ளது , இனியும் உறுதியாகவே இருக்கும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அதிமுக மற்றும் பாஜக உறவு உறுதியாக உள்ளது இனியும் உறுதியாகவே இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை மூலம் அண்ணாமலை கூறியதாவது : அதிமுகவில் யாரை இணைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய அதிமுகவில் சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் தலையிட கூட்டணிக் கட்சிக்கு கூட உரிமை இல்லை

நாடு முழுவதும் கூட்டணிக் கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை. அதிமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்ன கருத்துக்கு, கண், காது, மூக்கு ஜோடித்து ஊடக சித்திரம் வரையப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்