வணிகம்

(அக் – 30) இன்றைய பெட்ரோல் மற்றும டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (அக்.,30), பெட்ரோல் லிட்டருக்கு 105.74 ரூபாய், டீசல் லிட்டருக்கு 101.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால், எப்போது இல்லாத வகையில் அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.105.43 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.101.59 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.105.74 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.101.92 விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.