பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114-வது பிறந்தநாள் : முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி..!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி.

இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
