ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் – அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து பேசியுள்ள பன்னீர்செல்வம் கூறியதாவது :
தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பொருத்தமற்ற, மரபு மீறிய, உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல்
ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் திரும்பப்பெற வேண்டும்
நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு நாளை தொடர்ந்து கொண்டாட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
