அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை..! தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த கனிமொழி எம்பி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை விரைவாக அகற்றும் பணிகளை துரிதபடுத்தும் விதமாக, இன்று (30/10/2021) காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி

இந்நிகழ்வில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.