வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கான மாதாந்திர ரிப்போர்ட் கார்ட் வேண்டும்..! தமிழக முதல்வருக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கான மாதாந்திர ரிப்போர்ட் கார்ட் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில்: சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்த திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும், மாதாந்திர ரிப்போர்ட் வழங்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
