உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய கனிமொழி எம்பி…
உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு, இன்று செவ்வாய்கிழமை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, மார்பக புற்றுநோயிக்கான சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை நலம் விசாரித்தார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி.

இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துறை மருத்துவர் லலிதா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

