அரசு நலத்திட்ட விவரங்களை கவர்னருக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கவும்..! அரசுத்துறை செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்..!
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை கவர்னருக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கும்படி அரசுத்துறை செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய கவர்னராக பொறுப்பெற்றுள்ள ஆர்.என். ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார். அவர் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து கவர்னர் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்பட்டுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை கவர்னருக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கும்படி அரசுத்துறை செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பக அரசுத்துறையின் செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன, அதில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பயனடைந்த மக்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தயார்நிலையில் வைக்கும்படியும், இதை கவர்னருக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
