தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில், பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்த 5 பேர் தீயில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த பேக்கரியில் பரவியதையடுத்து, பேக்கரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால், அங்கு பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

பட்டாசு கடையில் ஏற்பட்ட இந்த பயங்கரமான தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. எனினும், எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.