தமிழ்நாடு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு..! காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம், வரதட்சணை மரணம், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் மற்றும் மானபங்கபடுத்துதல் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்ககளில், 4 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, 370 பாலியல் கொடுமை வழக்குகளும், 28 வரதட்சணை கொடுமை வழக்குகள் என மொத்தமாக ஆயிரத்து 982 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டு இது மொத்தமாக 2 ஆயிரத்து 25 அதிகரித்துள்ளன.

2021 ஜூன் மாதம் வரை பாலியல் பலாத்காரம் மொத்தமாக 960 வழக்குகள் பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.