ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஊரக உள்ளாட்சி தேர்தலை தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர்
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடத்த வேண்டும்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை விடுத்தோம்
தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்
பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார் .
