அரசியல்தமிழ்நாடு

இன்னும் காலம் கடக்கவில்லை..! மகாராஷ்டிரா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதிக்கலாம் – அண்ணாமலை

மகாராஷ்டிரா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கொடுக்காமல் தமிழக அரசு பிடிவாதமாக இருக்க காரணம் என்னவென்று தெரியவில்லை. பாஜக தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந்தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகளை தங்களது வீடுகள் முன்பு வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இது தனிமனித உரிமை, இதை தடுக்க யாருக்கும் அனுமதியில்லை. மகாராஷ்டிரா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபாடு நடத்த அனுமதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.