தமிழ்நாடுவிளையாட்டு

சோதனை கடந்து சாதிக்க துடிக்கும் இளம் குத்துச்சண்டை வீரர்..! ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புரோ குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் கரூர் வீரருக்கு பாஜக சார்பில் நிதி…!

கரூர் கருப்பாயி கோயில் தெருவை சேர்ந்தவர் தாஸ் மகன் மதன்(25). குத்துச்சண்டை வீரரான இவர் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புரோ குத்துச்சண்டை போட்டியில் 90 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா செல்ல போதிய நிதி திரட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார் . இதுகுறித்து தகவலறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் பேரில் கரூர் செந்தில்நாதன் நிதியுதவி வழங்க முடிவு செய்தார். அதன்படி மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி முன்னிலையில் செந்தில்நாதன் குத்துச்சண்டை வீரர் மதனுக்கு ரூ.30ஆயிரத்துக்கான காசோலை வழங்கி பாராட்டினார். இதில் இளங்கோ உட்பட பலர் உடன் இருந்தனர்.