டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை
டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், திமுக அரசு தரம் உயர்த்தி உள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறினார்.
இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றும் நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
