தமிழ்நாடு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார்.

சென்னையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள வீட்டில் ஓ.பி.எஸ் அவர்களுடன் வசித்து வந்தார்.

Image

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று மருத்துவமனையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

latest tamil news