அரசியல்தமிழ்நாடு

ஓபிஎஸ் மனைவி மறைவு…! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Image

அஞ்சலி செலுத்திய பின், மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

முன்னதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.