தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :
9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தல்
மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்
அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை
வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது .
