ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள நம் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் தொடர் போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்துள்ளனர் .தலிபான்களின் இந்த செயலுக்கு பன்னாட்டு தலைவர்கள் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் .
இந்தியா வர விரும்பும் இந்தியர்கள் அனைவரையும் தாயகம் அழைத்து வாருங்கள். நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
