மக்கள் ஆசி யாத்திரை குறித்து விளக்கம் அளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…!
மக்கள் ஆசி யாத்திரைக்கு வித்திட்டவர் பிரதமர் மோடி அவர்கள் தான் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொண்டர்களை சந்தித்து வருகின்றனர் அப்போது அவர் கூறியதாவது :
தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நான் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து உங்களிடம் ஆசி வாங்க வந்துள்ளேன்”
12 பட்டியல் இன மத்திய மந்திரிகள், மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள் 8 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 22 பேர், 12 பெண்கள் என புதிதாக மத்திய அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்
இவர்களை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முயன்றபோது எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டு தடுத்தனர். அதனால்தான் தற்போது உங்களிடம் ஆசி பெறுவதற்காக மோடி எங்களை அனுப்பியுள்ளார். அதுதான் மக்கள் ஆசி யாத்திரை”
ஓபிசி பிரிவில் இடம்பெறும் சாதிகளின் பட்டியலை திருத்தியமைத்து சமூக நீதியை நிலை நாட்டியவர் பிரதமர் மோடி. மக்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்
