பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு… 6 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
2010 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் வெகுவாக பேசப்பட்டது. பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு காவல் துறை விசாரித்தபோது 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் என்பவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
